Breaking News

Day: March 27, 2020

COVID19 தனது அலுவலகங்களை மூடும் HAL !!

March 27, 2020

நாட்டின் ஒரே விமான தயாரிப்பு நிறுவனமான HAL கொரோனா தொற்று காரணமாக தனது தயாரிப்பு பிரிவு மற்றும் அலுலகங்களை மார்ச்31 வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. HAL செய்தித்தொடர்பாளர் கோபால் சுடர் கூறும்போது “குறைந்த எண்ணிக்கையிலான பராமரிப்பு, நீர் விநியோகம், மின்சார விநியோகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டியதாகிறது” என்றார். மேலும் கூறும்போது இந்த சில நாட்கள் வேலைநிறுத்தம் திட்டங்களில் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது சில நடவடிக்கைகள் மூலம் இந்நேர […]

Read More

COVID19 – ஆபரேஷன் நமஸ்தே !! களம் காணும் இந்திய ராணுவம் !!

March 27, 2020

இந்திய ராணுவம் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியது. தில்லியில் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே இதனை தொடங்கி வைத்த பின்னர் அளித்த பேட்டியில் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது போல தற்போதும் ராணுவம் சிறப்பாக செயல்படும் என்றார். மேலும் ராணுவ பணியின் தன்மை காரணமாக SOCIAL DISTANCINGஐ கடைபிடிக்க முடியாத சூழல் உள்ளது ஆகவே அதற்கு மாற்றாக வேறு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், எனது வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது நாட்டை காக்க முடியும் […]

Read More

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் !!

March 27, 2020

நேற்று ஜம்முவின் கத்துவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையருகே பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று காலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தார் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் மோர்ட்டார்களை கொண்டு பாக் ராணுவம் இந்திய நிலைகளை தாக்கியுள்ளது. இந்திய ராணுவமும் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக திருப்பி தாக்கியுள்ளது. ஜனவரி1 முதல் ஃபெப்ரவரி23 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 646 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. கடந்த 2019ஆம் அண்டில் 3,200 தாக்குதல்களை பாகிஸ்தான் […]

Read More

காபுல் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்திய தூதகரத்தையும் தாக்க திட்டமிட்டு இருந்தனர் !!

March 27, 2020

கடந்த புதன்கிழமையன்று ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்குள்ள இந்திய தூதரகத்தை தாக்க திட்டம் தீட்டி இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை ஹக்கானி குழுவினர் நடத்தியதாக ஆஃப்கன் பாதுகாப்பு படைகள் தெரிவித்தன. ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலை ஹக்கானி குழு நடத்தியுள்ளது. இந்திய தூதரகத்தை தாக்க இருந்த நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததால் உள்புக முடியாமல் அருகில் இருந்த சீக்கிய குருத்வாராவை தாக்கியதாக தகவல்கள் […]

Read More

சு30எம்.கே.ஐ விமானங்களுக்கு பின்னர் அஸ்திரா ஏவுகணைகளை பெறும் மிக்29 யு.பி.ஜி விமானங்கள் !!

March 27, 2020

இந்திய விமானப்படையின் தலைமையகம் தனது படையில் உள்ள மேம்படுத்தப்பட்ட 60 மிக்29 விமானங்களில் அஸ்திரா மார்க்1 ஏவுகணைகளை பொருத்த முடிவு செய்துள்ளது. இந்திய விமானப்படை முதல் கட்டமாக சுமார் 100கிலோமீட்டர் தாக்குதல் வரம்புள்ள 50அஸ்திரா மார்க்1 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது ஒரேடியாக 200 அஸ்திரா ஏவுகணைகளை தனது சுகோய்30 மற்றும் மிக்29 விமானங்களுக்காக வாங்க முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் இந்திய விமானப்படையில் உள்ள மற்ற போர் […]

Read More

பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய மத்திய ரிசர்வ் படை

March 27, 2020

நாடு முழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது.அத்தோடு பொருளாதார நிலையும் மந்தமாக உள்ள நிலையில் இந்த கொரானா தொற்றை சமாளிக்க பல்வேறு நபர்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதம் தாங்கிய படைப்பிரிவுகளுள் ஒரு படையும், இந்தியாவின் அமைதி காவலர்களுமான மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமர் நிவாரண […]

Read More

கொரானா இன்றைய நிலை: 20 பேர் உயிரிழப்பு; மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700ஐ தாண்டியது

March 27, 2020

ஒரே நாளில் நேற்று கொரானா தொற்றுக்கு ஏழு பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் ஏழு பேர் உயிரிப்பது இதுவே முதல் முறை.இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 20ஆக உள்ளது.தவிர புதிதாக 88 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் கொரானா தொற்று உள்ள நபர்களின் எண்ணிக்கை 727 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் வயது முதிந்தவர்களாக உள்ளனர்.காஷ்மீரில் 65 வயது முதியவரும்,இராஜஸ்தானில் 75வயது முதியவரும் வியாழன் அன்று உயிரிழந்துள்ளனர். மத்திய […]

Read More