Day: March 24, 2020

21 நாட்களுக்கு நாடு முடக்கப்படுகிறது-பிரதமர் மோடி அறிவிப்பு

March 24, 2020

21 நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என சில மணி நேரம் முன்பு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார். இது பற்றிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், அத்தியாவசிய தேவை சார்ந்த கடைகள் (காய்கறிகள், பால், இறைச்சி, மீன்) , எரிபொருள் நிலையங்கள், எரிவாயு சேவைகள் ஆகியவை வழக்கம் போல இயங்கும் எனவும் தற்போது நாட்டிற்கு இன்றியமையாத மருத்துவதுறை தொடர்ந்து இயங்கும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு உத்தரவை மீறினால் இ.பி.கோ 188இன் படி ஒரு மாதம் […]

Read More

ராணுவம் மற்றும் துணை ராணுவம் தயார்நிலையில் !!

March 24, 2020

கோவிட்-பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்துவதால், எந்தவொரு அவசர காலத்திலும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவப்படைகள் மற்றும் துணை ராணுவப்படைகள் தயார்நிலையில் காத்திருப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்களின்படி, இது தொடர்பாக இதுவரை பாதுகாப்புப் படைகள் அல்லது துணை ராணுவப் படையினரின் தேவை பற்றிய முறையான கோரிக்கை எதுவும் இல்லை என்றாலும், தேவை ஏற்பட்டால் இந்தப் படைகளை நிறுத்த முடியும். இது குறித்து ஒரு அதிகாரி கூறும்போது “ஏற்கனவே குறிப்பிட்ட பல படைப்பிரிவுகளை தயார்நிலையில் வைத்துள்ளோம், தேவை ஏற்படும் பட்சத்தில் […]

Read More

நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் தீர்மானத்தில் இந்திய விமானப்படை !!

March 24, 2020

புதிய விமானங்களை வாங்குவதற்கான முந்தைய தோல்வியுற்ற முயற்சிகளின் பின்னணியில் தற்போது நேரடி கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, போர் விமானங்களின் வரம்பை நீட்டிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானத்தை முதன்முறையாக குத்தகைக்கு எடுப்பதை பற்றி இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. அநாமதேய நிபந்தனையின் அடிப்படையில் இந்த முடிவு ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டதாக இரு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுதங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் முதன்முறையாக அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை வாங்குவது தொடர்பான செலவுகளைக் குறைக்க குத்தகைக்கு விடப்பட்ட […]

Read More

சேலம் மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை அறிவுப்பு

March 24, 2020

சேலம் மாவட்ட மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனா அறிகுறிகளுடன் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சேலம் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மலேசியாவில் இருந்து இந்தியா வந்த 113 பேர்களில் ஒன்பது பேருக்கு கொரானா அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

தனது தளங்களுக்குள் கொரோனா வைரஸ் நுழையாமல் தடுக்க முப்படைகளும் தீவிர முயற்சி !!

March 24, 2020

படைவீரர்கள் மற்றும் அத்தியாவசிய சிவில் ஒப்பந்த ஊழியர்களின் நுழைவைக் கட்டுப்படுத்துவதிலிருந்து, துருப்புக்களுக்கான உணவு நேரங்கள் வரை – கொரோனா வைரஸ் அதன் தளங்களுக்குள் வருவதைத் தடுக்க இந்திய இராணுவம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. லேயில் 34 வயதான ஜவான் – COVID-19 ஆல் பாதிக்கப்ட்டதை இராணுவம் அறிவித்த பின்னர் இந்த பயிற்சிகள் பலப்படுத்தப்படுகின்றன. லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அந்த சிப்பாயுடன் பணியாற்றி வந்த அனைத்து வீரர்களையும் சக ஊழியர்களையும் ராணுவம் தனிமைப்படுத்தியுள்ளது. இராணுவம் இந்த […]

Read More

இந்தியாவில் ஒரே நாளில் 99 பேருக்கு பாதிப்பு : இரண்டு பேர் உயிரிழப்பு-மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தொடுகிறது

March 24, 2020

கோவிட்-19 பாதிப்பு நாட்டில் அதிகரித்து வரும் வேளையில் தற்போது 99 புதிய கொரானா பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் இத்தனை பேருக்கு வந்துள்ளது இதுவே முதல் முறை.மேலும் கொரானா பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தோடு இந்த பாதிப்பால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498 ஆக உள்ளது. இதில் 40 பேர் வெளிநாட்டவர்கள். மற்றொரு பக்கமாக 35 தொற்று உள்ள நபர்கள் குணப்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனா். கொரானா […]

Read More

துருக்கி உடனான ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்திற்கு நகரும் இந்தியா !!

March 24, 2020

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு ஆதரவு அளித்த துருக்கி அரசாங்கத்தை கண்டித்து அப்போது கையெழுத்து இடவிருந்த கடற்படைக்கான ஐந்து படை உதவி கப்பல்களுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்திய அரசு ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிவு செய்துள்ளது. படை உதவி கப்பல்கள் என்பவை எரிபொருள், உணவு, ஆயுதங்கள், மருந்து ஆகியவற்றை சுமந்து கொண்டு முன்னிலையில் இருக்கும் போர்கப்பல்களுக்கு வழங்கும், இதனால் போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்து […]

Read More

கொரோனா வைரஸுக்கு தீர்வு கண்டுபிடிக்க பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு !!

March 24, 2020

கோவிட் -19 வைரஸ் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான தேசத்தின் கூட்டு முயற்சியில் இணையுமாறு பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி ஆய்வகங்களை அரசாங்கம் கேட்டுள்ளது. மேலும் நாட்டின் உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் எந்தவொரு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை தளங்களிலிருந்தும் மருத்துவ மாதிரிகளை வாங்கி ஆராய்ச்சி செய்ய பணிக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் விஞ்ஞான சமூகத்திற்கு அவர்களின் ஆய்வின் தாக்கத்தை அதிகரிக்க திறந்த வடிவத்தில் பகிரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை […]

Read More