Day: March 15, 2020

கொரானாவை கட்டுப்படுத்த உதவுங்கள்-இந்தியாவிற்கு ஈரான் கோரிக்கை

March 15, 2020

கொரானாவை எதிர்த்து போரிட தங்களுக்கு உதவுமாறு இந்தியாவிற்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.ஈரான் தலைவர் ஹசன் ருஹானி அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். கோரானாவிற்கு எதிரான தங்களது போராட்டம் அமெரிக்க பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரானாவை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் நடவடிக்கை தேவை என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் பரவுதலுக்கு எந்தவிசயமும் தடை கிடையாது.எந்தசார்பற்றும் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பரவி வருகிறது என அவர் […]

Read More

காஷ்மீரில் பயங்கரச் சண்டை-நான்கு லஷ்கர் பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய வீரர்கள்

March 15, 2020

காஷ்மீரில் தற்போது நடந்த சண்டையில் நான்கு லஷ்கர் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர் இந்திய இராணுவ வீரர்கள். இந்த என்கௌன்டர் காரணமாக அனந்தநாக் மற்றும் குல்கம் மாவட்டத்தில் இணைய சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.லஷ்கர் பயங்கரவாதிகளுடன்,ஹிஸ்புல் பயங்கரவாதிகளும் இந்த சண்டையில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 19வது இராஷ்டீரிய ரைபிள்ஸ், காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு படை வீரர்கள் ஆகியோர் இணைந்து டையல்கம் பகுதியை சுற்றி வளைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்து நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.நமது பக்கம் எந்த சேதமும் இல்லை.

Read More

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக மீட்க மொத்த லேப் உபகரணங்களை ஈரானிற்கு அனுப்பும் இந்தியா

March 15, 2020

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் உள்ள இந்தியர்களை மிக வேகமாக மீட்க , அவர்களை அங்கேயே பரிசோதனை செய்து மீட்க மொத்த லேப் உபகரணங்களை ஈரானிற்கு அனுப்பியுள்ளது இந்தியா.ஈரானில் தனித்துவிடப்பட்டுள்ள மொத்த இந்தியர்களையும் மீட்க இந்தியா தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த லேப் உபகரணங்களுடன் இந்தியா வைராலஜி டிபார்ட்மென்டை சேர்ந்த ஒரு அறிவியலாளரையும், இந்தியன் மருத்துவ ஆராய்சி கழகத்தை சேர்ந்த மூன்று அறிவியலாளர்களையும் அனுப்பியுள்ளது. ஈரானில் லேப் அமைத்து அங்கேயே இந்தியர்கள் பரிசோதனை […]

Read More