சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் கடும் சண்டை, 13காவல்படையினர் மாயம் !!

  • Tamil Defense
  • March 22, 2020
  • Comments Off on சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் கடும் சண்டை, 13காவல்படையினர் மாயம் !!

சத்தீஸ்கரின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தின் காடுகளில் நக்சல்களுடன் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் பதினான்கு போலீசார் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், என்கவுண்டரைத் தொடர்ந்து காடுகளில் குறைந்தது 13 பாதுகாப்புப் படையினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை அன்று சிந்தகுஃபா பகுதியில் உள்ள கோரஜ்குடா மலைகள் அருகே பிற்பகல் 2.30 மணியளவில் இந்த மோதல் நடந்தது. பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

எல்மகுண்டா அருகே எதிரிகளின் இருப்பிடத்தை பற்றிய தகவல்களின் அடிப்படையில் சிந்தகுபா, புர்கபால் மற்றும் டைமல்வாடா முகாம்களில் இருந்து காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் குழு (டி.ஆர்.ஜி), சிறப்பு பணிக்குழு மற்றும் கோப்ரா கமாண்டோ குழு ஆகியவை பணிகளை தொடங்கின.

மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எல்மகுண்டா அருகே உள்ள கோரஜ்குடா மலைகள் வழியாக குழு முன்னேறி வந்தபோது, ​​இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு வெடித்தது.

“கிடைத்த உள்ளீடுகளின் அடிப்படையில், பாதுகாப்புப் படைகள் கடுமையாக பதிலடி கொடுத்ததால் குறைந்தது நான்கு முதல் ஐந்து நக்சல்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும்றும் சம எண்ணிக்கையில் காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” எனவும் அந்த அதிகாரி கூறினார்.

“பதினான்கு வீரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் ராய்ப்பூருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்களில் இருவர் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

“இதுவரை என்கவுண்டரில் எந்த வீரர்களும் இறந்ததாக எந்த அறிக்கையும் இல்லை. இருப்பினும், என்கவுன்டருக்குப் பிறகு குறைந்தது 13 ஜவான்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் சுமார் 150 பாதுகாப்புப் படையினர்
இன்னும் காட்டில் இருப்பதாகவும், ஒரு அறிக்கை கூறுகிறது