ராணுவம் மற்றும் துணை ராணுவம் தயார்நிலையில் !!

  • Tamil Defense
  • March 24, 2020
  • Comments Off on ராணுவம் மற்றும் துணை ராணுவம் தயார்நிலையில் !!

கோவிட்-பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்துவதால், எந்தவொரு அவசர காலத்திலும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவப்படைகள் மற்றும் துணை ராணுவப்படைகள் தயார்நிலையில் காத்திருப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்களின்படி, இது தொடர்பாக இதுவரை பாதுகாப்புப் படைகள் அல்லது துணை ராணுவப் படையினரின் தேவை பற்றிய முறையான கோரிக்கை எதுவும் இல்லை என்றாலும், தேவை ஏற்பட்டால் இந்தப் படைகளை நிறுத்த முடியும்.

இது குறித்து ஒரு அதிகாரி கூறும்போது “ஏற்கனவே குறிப்பிட்ட பல படைப்பிரிவுகளை தயார்நிலையில் வைத்துள்ளோம், தேவை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இப்பரிவுகள் நகர்த்தப்படும். இவர்கள் மாநில காவல்துறையினருக்கு உதவியாக இருப்பர், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மருத்தவ குழுவினர் மற்றும் மருந்து பொருட்களை நகர்த்துவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, தனிமைப்படுத்தல் மையங்களை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.” என்றார்.

அந்த அதிகாரி மேலும் கூறுகையில் “இதன் காரணமாக யாரும் பயப்பட வேண்டியதில்லை தேவை ஏற்பட்டால் சந்திப்பதற்கு தயாராக இருப்பதே எங்கள் நோக்கம்” என்றும் “கடந்த காலங்களில் மாநில அரசு அதிகாரிகள மற்றும் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட பயிற்சிகளை நடத்தியிருக்கிறோம்” என்றார்.

ரயில்வே மற்றும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இந்திய விமானப்படையும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தெவை ஏற்பட்டால் மருத்துவ குழுவினர், மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துகளை விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் முலம் இடமாற்றம் செய்யலாம்.

பாதிக்கப்பட்ட நாடுகளின் ராணுவங்கள் அந்தந்த நாடுகளில் கோவிட்டை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.