
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி சுமார் 2.6 பில்லியன் டாலர்கள் அளவிலான இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான லாக்ஹீடு மார்டின் நிறுவனத்திடம் இருந்து இராணுவ வானூர்திகள் வாங்குவதும் அடக்கம் ஆகும்.
இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியத்துவமான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.பாதுகாப்பு முதல் சீன எதிர்ப்பு வரை அனைத்து விதமான முக்கிய விசயங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த பயணம் உதவும்.
சீனாவிடம் இருந்து இந்தியா தன்னை காத்து கொள்ள இராணுவ பலம் அவசியம் என 2007ல் உணர்ந்தது முதல் இரஷ்யாவிடம் இருந்து தளவாடங்கள் கொள்முதலை குறைத்து அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்து தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது.கிட்டத்தட்ட 17 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
அடுத்த இரு வாரத்திற்குள் கடற்படைக்காக 24 MH-60R Seahawk வானூர்திகளை பெற பாதுகாப்புக்கான கேபினட் குழு அனுமதி அளிக்க உள்ளது.அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் மூலம் இந்த வானூர்திகள் பெறப்படும்.
நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் நிறைய காலதாமதம் ஆகிறது என்ற காரணத்தாலும்,முன்னனி போர்க்கப்பல்களுக்கு இந்த வானூர்தி உடனடி அவசர தேவை என்பதாலும் அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ ஏற்றுமதி திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் இந்த வானூரதிகள் வாங்கப்படுகின்றன.
வரும் பிப் 24 வாக்கில் ட்ரம்ப் இந்தியா வருகிறார் என தகவல்கள் வெளியானாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அப்பாச்சி முதல் ரோமியோ வானூர்திகள் வரை இந்தியா அமெரிக்காவிடம் தளவாடங்களை வாங்கி குவித்து வருவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அதிகரிக்க இரு நாடுகளுமே முயற்சிப்பதை குறிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாங்க உள்ள புதிய பலபணி வானூர்திகள் ஹெல்ஃபயர் ஏவுகணைகளுடன் வருகின்றன.
இதன் உதவியுடன் நமது போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் எதிரி நீர்மூழ்கிகளை வேட்டையாடும்.
இந்தியாவின் பல முக்கிய முன்னனி போர்க்கப்பல்கள் நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் இல்லாமல் உள்ளன.காரணம் நிதி பற்றாக்குறை.எனவே தான் தற்போது கடற்படை இந்த வானூர்தி ஒப்பந்தத்தை முக்கியமாக கருதுகிறது.