கேப்டன் துசார் மகாஜன்

சேவை எண் : IC-72326M

பிறப்பு  : ஏப்ரல்  20,1990

இடம் : உதம்பூர் ,  ஜம்மு

சேவை : இராணுவம்

தரம் : கேப்டன்

பிரிவு : 9 பாரா (SF)

ரெஜிமென்ட்  : பாராசூட் ரெஜிமென்ட்

விருது  : சௌரிய சக்ரா

வீரமரணம் : பிப்  21, 2016

கேப்டன் துசார் மகாஜன் 20 ஏப்ரல் 1990ல் ஜம்முவின் உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா முன்னாள் தலைமையாசிரியர்.நல்ல படிப்பு சம்மந்தமான குடும்பமாக இருந்தாலும் இளவயதிலேயே கேப்டன் துசார் அவர்களுக்கு தான் ஒரு இராணுவ வீரராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.பள்ளி வயது விளையாட்டே பயங்கரவாதிகளை எதிர்கொண்டு அழிப்பது போலவே அமைந்தது.தனது கனவை நனவாக்க கடந்த 2006ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார்.அதன் பிறகு 2009ல் இந்தியன் மிலிட்டரி அகாடமி.

தன் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தான் அவர் இராணுவத்தில் இணைந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.அவரது அப்பா அவரது அண்ணனை போலவே துசார் அவர்களையும் பொறியியலாளராக்க  விரும்பினார்.ஆனால் அவர் தனது கனவை பின் தொடர்ந்து சென்று இராணுவத்தின் மிக பிரசித்து பெற்ற பாராச்சூட் ரெஜிமென்டில் இணைந்து (9வது பாரா) சிறப்பு படை கமாண்டோ ஆனார்.9வது சிறப்பு படை தனது கருப்பு ஆபரேசன்களுக்கு பேர் போன் படை.அதில் தன்னை இணைத்து ஆக்சன் மிகுந்த சாசக பயணத்துக்கு தன்னை தயார் படுத்தி கொண்டார்.

பாம்போர் தாக்குதல் : 21 பிப் 2016

 
2016ம் வருடம் கேப்டனின் படைப்பிரிவு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் தினசரி அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.அதே போல தான்அன்றும் 9வது பாரா படை அனுப்பப்பட்டிருந்தது.

பாம்போர் பகுதியில் தேடுதல் வேட்டையில் இருந்து திரும்பி கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர்.தாக்கிய பயங்கரவாதிகள் அருகே இருந்த அரசு கட்டிடத்தில் புகுந்து கொண்டனர்.காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதவற்கு முன்பே அரசு ஊழியர்கள் ,மாணவர்கள் உட்பட 100 பேரை மீட்டது.பயங்கரவாதிகளை ஒழிக்க 9வது சிறப்பு படை வரவழைக்கப்பட்டது.

வீரர்கள் உள்நுழைந்து தாக்க தொடங்கினர்.சண்டை பல மணிநேரம் நடைபெற்றது.கமாண்டாே வீரர்கள் நள்ளிரவு ஆபரேசன் நடத்த முடிவு செய்தனர்.இதை முடிக்க 9வது சிறப்பு படை கமாண்டாே வீரர்கள் தயாரானார்கள்.கேப்டன் துசார் தலைமையிலான  தாக்கும் வீரர்கள் குழு கட்டிடத்திற்குள் புகுந்து புயலாய் சுழன்றடிக்க பயங்கரவாதிகள் கட்டிடத்தின் மறுபக்கத்திற்கு தள்ளப்பட்டனர்.பயங்கரவாதிகள் நன்கு ஆயுதப்பயிற்சி பெற்று தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கிரேனேடு என சகல ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.

இந்த சண்டையில் கேப்டனுக்கு நான்கு குண்டு காயங்கள் அடைந்து படுகாயம் அடைந்தார்.பின் அவரை ஸ்ரீநகரில் உள்ள 92 தள மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் வீரமரணம் அடைந்தார்.

போரில் வீரமுடன் முன்னின்று செயல்பட்டது, தைரியத்துடன் தனது வீரர்களை வழிநடத்தியது போன்ற வீரச் செயல்களுக்காக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.அவரது தியாகத்தால் விளைந்த செயல்களில் காரணமாக எதிரிகளை நமது வீரர்கள் வெற்றிகரமாக வீழ்த்தினர்.