புல்வாமா தாக்குதல்: பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுத்த முப்படை தளபதிகள்-வெளிவந்த புதிய அதிர்ச்சி தகவல்கள்

  • Tamil Defense
  • February 12, 2020
  • Comments Off on புல்வாமா தாக்குதல்: பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுத்த முப்படை தளபதிகள்-வெளிவந்த புதிய அதிர்ச்சி தகவல்கள்

இது ஒரு நேர்காணலின் மொழிபெயர்ப்பு.நமது முன்னாள் வான்படை தளபதி தனோவா அவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு.

கேள்வி: பாலக்கோட் ஆபரேசனை பாக் தன்னுடைய இராணுவ மற்றும் ராஜாங்க நடவடிக்கைகளின் வெற்றி என்று காட்டிகொள்கிறது.இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இம்ரான்கான் அரசு கூறுகிறது.இதன் மூலம் காஷ்மீர் பக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இந்தியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் என காட்ட முயல்கிறது.இது பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

பதில்: இராணுவ வெற்றி என்பது நீங்கள் இலக்கை வெற்றி கொண்டனரா அல்லது இல்லையா என்பதை பொருத்தது தான்.எங்களுடைய நோக்கம் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பழிதீர்க்க பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஸ் முகாம்களை தாக்குதவது தான்.இந்த முகாம்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அல்ல.பாக்கில் உள்ள மன்ஷெரா பகுதியில் உள்ளன.நாங்கள் பாலக்கோட்டில் ஜாபா டாப்பில் உள்ள முகாம்களை வெற்றிகரமாக தாக்கியுள்ளோம்.

நாங்கள் தாக்கியதை செயற்கை கோள் படங்கள் மூலம் உறுதிபடுத்தியுள்ளோம்.அதன் பிறகு பாக் அந்த பகுதிக்குள் யாரையும் விடமால் தனிமைபடுத்தியது.அது சாதாரண இடமாக இருந்தால் அதை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் ? 40 நாட்கள் அந்த இடத்திற்கு யாரையும் அனுமதிக்கவில்லை பாகிஸ்தான்.
நமது விமானங்கள் பயங்கரவாத முகாம்களை தாக்கியது.பயங்கரவாதிகள் பலர் மடிந்தது உண்மை.இதன் மூலம் பாக் கூற்று தவறாகிறது.

இரண்டாவதாக நாங்கள் தாக்கியது இராணுவம் அல்லாத ஒரு இடத்தை தான்.ஆனால் பாக் நமது இராணுவ தளங்களை தாக்க வந்தது.தென் பீர்பாஞ்சல் பகுதியில் பாக் விமானங்கள் குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியவில்லை.பாக் வீசிய குண்டுகள் இலக்கில் இருந்து 500மீ முதல் 1.5கிமீ தூரத்தில் விழுந்தன.பாகிஸ்தான் முதல் தலைமுறை குண்டுகளை வீசியது எனவே தான் அவற்றால் இலக்கை தாக்க முடியவில்லை.ஆனால் இந்தியா மூன்றாம் தலைமுறை குண்டுகள் கொண்டு முகாம்களை அழித்தது.

நாம் ஒரு மிக்-21 விமானத்தை இழந்தோம்.பாக்கும் ஒரு எப்-16 விமானத்தை இழந்தது.ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை.ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பிப் 27 2019 அன்று அந்த பகுதியில் இரு விமானங்கள் விழுந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.எலக்ட்ரானிக் சென்சார்கள் வழியாக அதை எப்-16 தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளோம்.

கேள்வி: பாக்கிற்கு இந்தியாவை திருப்பி தாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு தாக்கியதா ?

பதில்: ஆம் பாக் இந்தியாவை தாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.ஆனால் நாங்கள் அதை முறியடித்துவிட்டோம்.நாங்களும் திருப்பி தாக்க தயாராகவே இருந்தோம்.நாங்கள் அவர்கள் தாக்குவார்கள் என எதிர்பார்த்திருந்தோம்.

கடற்படை மற்றும் இராணுவத்துடன் விமானப்படையும் எதற்குமே தயாராக இருந்தோம்.புல்வாமா தாக்குதலுக்கு பிறகு முப்படை தளபதிகளுமே அரசியல் தலைவர்களிடம் இதை விடக்கூடாது.பிரச்சனையை அதிகப்படுத்துவோம்.நாங்கள் எதற்குமே தயாராகவே உள்ளோம் என வலியுறுத்தி கூறினோம்.அதனால் தான் மோடி அரசு பதிலடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.நாங்கள் கண்களை கூட சிமிட்டவில்லை.பாகிஸ்தான் என்று வரும் போது நாங்கள் எதற்குமே தயாராகவே இருந்தோம்.

எங்களுடைய வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாகவே செயல்பட்டன.நிறைய தந்திரங்கள் பயன்படுத்தினோம்.24-26 விமானங்கள் வரை கொண்டு வந்து தாக்கினார்கள்.சுகாய் ,மிராஜ் மற்றும் மிக் விமானங்களுடன் நாங்கள் தயாராகவே இருந்தோம்.குறிப்பிட்ட நேரத்திற்குள் ரபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால் அன்று நம்மிடம் ஆறு ரபேல் விமானங்கள் தாக்குதலுக்கு தயாராக இருந்திருக்கும்.

கேள்வி: ஆறு விமானங்கள் மொத்த வரலாற்றையும் மாற்றியிருக்குமா ?

ஆம் அன்று ரபேல் இருந்திருந்தால் அவர்களது அனைத்து எப்-16 விமானங்களும் ஓடியிருக்கும்.

கேள்வி: நீங்கள் ரபேல் பற்றி அதிகம் பேசுகிறீர்கள்.அதன் திறன் பற்றி கொஞ்சம் சொல்கிறீர்களா ?

அதன் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் தான் சிறப்பானது.சுற்றுப்புறம் பற்றி சிறப்பாக அறிந்திருந்தால் அன்றைய தினத்தை சிறப்பாக வென்றிருக்க முடியும்.முதலில் பார்ப்பவர்கள் முதலில் சுடுவர்.இங்கு தான் ரபேல் முதல் இடத்தை பிடிக்கிறது.

இன்னும் நிறைய கேள்விகளுக்கும் அவர் சிறப்பான பதிலை அளித்துள்ளார்.