மூன்றாவது ஸ்கார்பின் நீர்மூழ்கி எப்போது படையில் இணையும் ? புதிய தகவல்கள்

  • Tamil Defense
  • February 7, 2020
  • Comments Off on மூன்றாவது ஸ்கார்பின் நீர்மூழ்கி எப்போது படையில் இணையும் ? புதிய தகவல்கள்

மூன்றாவது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கியான கரஞ் நீர்மூழ்கி இந்த வருட இறுதி டிசம்பரில் படையில் இணைக்கப்படும் மற்றும் மீதமுள்ள நீர்மூழ்கிகளும் 2022க்குள் படையில் இணைக்கப்படும் என நேவல் குரூப் நிறுலனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு துைணை தலைவர் நிகோலஸ் டி லா வில்லிமார்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளில் ஏஐபி அமைப்பு இணைக்கும் திட்டம் 2023ல் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முதல் ஸ்கார்பின் நீர்மூழ்கியாக கல்வாரியின் முதல் அப்கிரேடு பணிகளின் போது இந்த ஏஐபி அமைப்பு இணைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கான இந்தியாவின் டிஆர்டிஓ , மசகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.வடிவம் தொடர்பான ஒப்பந்தம் டிஆர்டிஓ-உடன் இந்த வருட இறுதியில் கையெழுத்தாகும் என அவர் கூறியுள்ளார்.

கரஞ் நீர்மூழ்கி கடந்த ஜனவரி 2018ல் கடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.தற்போது சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது.முதல் நீர்மூழ்கியான கல்வாரி 2018ல் இணைக்கப்பட்டது.படையில் இணைக்கப்பட்டு அடுத்த ஆறு ஆண்டுகளில் அதாவது 2023 வாக்கில் அது தனது முதல் அப்கிரேடு பணியை மேற்கொள்ளும்.இந்த நேரத்தில் தான் ஏஐபி அமைப்பு இணைக்கப்படும்.இரண்டாவது நீர்மூழ்கியாக காந்தேரி கடந்த செப்டம்பரில் இணைக்கப்பட்டது.

உள்நாட்டு தயாரிப்பு பியூவல் செல் அடிப்படையிலான ஏஐபி மாடியூல் தற்போது டிஆர்டிஓ-வால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.கடந்ந அக்டோபரில் தரையை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பில் இந்த ஏஐபி இணைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.கல்வாரியின் முதல் அப்கிரேடு பணியின் போது இந்த ஏஐபி இணைக்கப்படும் என டிஆர்டிஓ உறுதிபட தெரிவித்துள்ளது.

இந்த ஏஐபி அமைப்பு டீசல்-மின்னனு நீர்மூழ்கிகள் நீண்ட காலத்திற்கு நீருக்குள் இருந்த செயல்பட உதவும் அமைப்பு ஆகும்.