
அமோகா-3 என பெயரிடப்பட்ட
வீரர்கள் ஏந்தி செலுத்தக்கூடிய ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணையை இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தற்போது நடந்து வரும் இராணுவக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.
மிக எளிதாக வடிவமைக்கப்பட்டு thrust vector control (TVC) மற்றும் இரு சீக்கர் தொழில்நுட்பம் பெற்றுள்ளது. இன்பிராரெட் மற்று் எலக்ட்ரோ ஆப்டிகல் என ஏவுகணையை வழிநடத்த இரு சீக்கர்களை பெற்றுள்ளது.
ஏவுவதற்கு முன்பே இலக்கை லாக் செய்து நேரடியாகவே இலக்கை தாக்கி அழிக்க கூடியது.
ஆர்மல் எதிர்ப்பு டான்டெம் வெடிபொருளை கொண்டுள்ள அமோகா-3 650மிமீ அளவுள்ள Explosive Reactive Armour-ஐ கூட துளைத்து சென்று இலக்கை அழிக்க கூடியது.
200-2500மீ தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த ஏவுகணை 18கிகி எடையுடையது.ஆனால் ஏவுகணை தயாரிப்பு பணியில் நுளையும் போது 15-16கிகி எடையுடையதாக தயாரிக்கப்படும் என பாரத் டைனமிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகம் தொடர்பான மற்ற தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை.வெடிபொருளின் எடை குறித்தும் வெளியிடவில்லை.
ஏவுகணை வடிவம் மற்றும் மேம்பாட்டை இரண்டே வருடத்திற்குள் முடித்து தற்போது ஏவுகணை சோதனை கட்டத்தில் உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனைகள் அனைத்தும் முடிந்தவுடன் இந்த ஏவுகணை இராணுவத்திற்கு வழங்க ஆபர் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.