
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ஒருவனை பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் கைது செய்துள்ளார்.
ஜீனைத் பருக் பன்டித் எனப்படும் பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன் ஆவான்.பொறி வைத்து அவனை பாதுகாப்பு படைகள் கைது செய்துள்ளன.
பாரமுல்லா மாவட்டத்தின் டாப்பர் பட்டான் எனும் பகுதியில் அவனுக்காக பாதுகாப்பு படைகள் விரித்த வலையில் விழுந்துள்ளான்.
இதற்கு முன்னரே இரவு நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் லஷ்கர் அமைப்பை சேர்ந்ந நவீத் அகமது பட் மற்றும் அகியுப் யாசீன் பட் எனும் இரு பயங்கரவாதிகளை இராணுவம் போட்டு தள்ளியது.
இவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக காஷ்மீர் டிஜிபி டில்பக் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த 2020ல் மட்டும் 12 ஆபரேசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இவற்றில் 25 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.3-4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பயங்கரவாதிகளுக்கு தகவல் தரும் உளவாளிகள் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவனிடம் இருந்து ஒரு சீன கைத்துப்பாக்கி,13 ரவுண்டு தோட்டாக்கள் மற்றும் இரு மேகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.