அடுத்த தலைமுறை SMX 3.0 நீர்மூழ்கியை இந்தியாவிற்கு வழங்க தயார் ; பிரான்ஸ் அறிவிப்பு

  • Tamil Defense
  • February 8, 2020
  • Comments Off on அடுத்த தலைமுறை SMX 3.0 நீர்மூழ்கியை இந்தியாவிற்கு வழங்க தயார் ; பிரான்ஸ் அறிவிப்பு

அடுத்த தலைமுறை SMX 3.0 நீர்மூழ்கியை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக பிரான்சின் நேவல் குரூப் நிறுவனம் கூறியுள்ளது.தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த நீர்மூழ்கி இந்திய ஏவுகணைகளான நிர்பயா மற்றும்
பிரம்மோஸ் என்ஜி ஏவுகணைகளை சுமந்து செல்லும் என கூறப்படுகிறது.

இந்தியா பி-75ஐ திட்டத்தின் கீழ் ஆறு கன்வென்சனல் நீர்மூழ்கிகளை கட்ட உள்ளது.இந்த திட்டத்திற்காக பிரான்சின் நேவல் க்ரூப் நிறுவனம் தனது புதிய SMX 3.0 நீர்மூழ்கியை இந்த டென்டரில் இணைத்துள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் நீர்மூழ்கி மசகான் கப்பல் கட்டும் தளம் அல்லது லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் இணைந்து புதிய நீர்மூழ்கிகளை இந்தியாவில் கட்டும்.

SMX 3.0 நீர்மூழ்கி 3000 டன்கள் எடையுடையது.இது ஷார்ட்பின் பாரகுடா நீர்மூழ்கியை விட 1000 டன்கள் குறைவானதாகவும்,ஸ்கார்பின் ரகத்தை விட 1200 டன்கள் அதிக எடையுடையதாகவும் உள்ளது.
SMX 3.0 நீர்மூழ்கியில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.நேவல் க்ருப் மற்றும் டஸ்ஸால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வீரர்களின் நலன்களுக்கு ஏற்ற பல அமைப்புகளை கப்பலில் ஏற்படுத்தியுள்ளன.

SMX 3.0 நீர்மூழ்கியில் ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவ 8 ஏவு குழாய்கள் உள்ளன.இந்த நீர்மூழ்கியில் இந்தியா ஸ்கார்பின் நீர்மூழ்கிக்காக மேம்படுத்திய பல அமைப்புகளை இணைக்கலாம்.

மேலும் நீர்மூழ்கியில் பிரான்ஸ் மற்றும் இந்திய ஏவுகணைகளை இணைத்து உபயோகப்படுத்தலாம்.தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மார்க் 3 வேகம் செல்லக்கூடிய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையும் மற்றும் சப்சோனிக் நிர்பயா ஏவுகணையும் இணைத்து பயன்படுத்தலாம்.