காஷ்மீருக்காக தனி கட்டளையகம்-ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத்

  • Tamil Defense
  • February 17, 2020
  • Comments Off on காஷ்மீருக்காக தனி கட்டளையகம்-ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத்

காஷ்மீருக்காக தனி கட்டளையகம்-ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத்

காஷ்மீருக்கென்றே தனிப்பட்ட ஒரு தியேட்டர் கமாண்ட் அமைக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதே போல் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளையகங்கள் இணைக்கப்பட்டு பெனின்சுலா கமாண்ட் என்ற புது கட்டளையகம் உருவாக்கப்பட உள்ளது.இந்த புது கமாண்ட் 2021வது வருட முடிவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.இது தவிர வான் பாதுகாப்பு கட்டளையகம் அடுத்த வருட தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த வான் பாதுகாப்பு அமைப்புகளும் விமானப்படைக்கு கீழே வர உள்ளது.இனி வான் பாதுகாப்பு அமைப்பு சொத்துக்கள் அனைத்தும் விமானப்படையின் கீழ் வரும்.

அதே போல கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு கட்டளையகங்கள் இணைக்கப்பட்டு பெனின்சுலா கமாண்ட் என்ற ஒற்றை அமைப்பாக உருவாக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு தளவாடம் மற்றும் பயிற்சிகளுக்காக தனி கமாண்ட் உருவாக்கப்படும் என தளபதி ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்து , தற்போது கட்டப்பட்டு வரும்விக்ராந்த் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட பிறகு முடிவெடுக்கப்படும் என தளபதி கூறியுள்ளார்.

விமானம் தாங்கி கப்பல்களை விட நீர்மூழ்கிகளே கடற்படைக்கு முக்கியமாக தெரிகிறது என தளபதி ராவத் கூறியுள்ளார்.