மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்; ராக்கெட் தயார் -இஸ்ரோ அறிவிப்பு
1 min read

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்; ராக்கெட் தயார் -இஸ்ரோ அறிவிப்பு

இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான வேலைப்பாடுகளை இஸ்ரோ தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது இஸ்ரோ தலைவர் கே சிவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ள ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் வடிவமைப்பு தயாராக உள்ளதாகவும் விரைவில் அவற்றை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வடிவமைப்பு ,ஏவு வாகனத்தின் பொறியியல் செயல்பாடு மற்றும் ஆர்பிட்டல் மோடுல் சிஸ்டம் குறித்து படிப்பினைகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இந்த அமைப்புகள் சோதனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் மற்றும் ஆர்பிட்டல் மோடியுல் அமைப்பு தொடர் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும்.2021ல் முதல் மனிதனற்ற பயணத்தை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.மனிதனை ஏற்றி செல்லும் பயணம் 2022 ஆகஸ்டு வாக்கில் தொடங்கும்.

இது தவிர சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ விலை குறைவான சிறிய ராக்கெட்டுகளை இஸ்ரோ மேம்படுத்தி வருகிறது.மேலும் தமிழகத்தின் குலேசேகர பட்டிணத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் அமைக்க உள்ளதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.