
அமெரிக்காவின் மிகப் பெரிய ஏரோஸ்பேஸ் நிறுவனமான லாக்ஹீடு மார்டின் பல பில்லியன் டாலர் திட்டமான இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமான திட்டத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் என அறிவித்துள்ளது.இது தவிர தேஜசின் பலத்தை அதிகரிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி 24-25ல் ட்ரம்பின் இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்த ஆபரை லாக்ஹீடு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவின் தேஜஸ் விமானத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அடுத்த தலைமுறை விமானத் தயாரிப்பிற்கு உதவத் திறந்த மனதோடு தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் அதிகாரி விவேக் லான் அறிவித்துள்ளார்.
இந்தியாலின் ஹால் மற்றும் ஏடிஏ தற்போது தேஜசின் அடுத்த ரகத்தை உருவாக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.இது தவிர 5பில்லியன் டாலர்கள் செலவில் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் தயாரிக்க முயற்சித்து வருகிறது.
இந்தியா பல பில்லியன் டாலர்கள் செலவில் புதிய விமானங்கள் வாங்க உள்ளது.இதற்காக இந்த லாக்ஹீடு நிறுவனம் தனது புதிய எப்-21 விமானத்தை விற்கு முயற்சித்து வருகிறது.