விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகரான கான்ஸ்டபிள் ரத்தன்லால்-எங்கள் அப்பா செய்த தவறென்ன? குழந்தைகள் உருக்கம்

  • Tamil Defense
  • February 25, 2020
  • Comments Off on விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகரான கான்ஸ்டபிள் ரத்தன்லால்-எங்கள் அப்பா செய்த தவறென்ன? குழந்தைகள் உருக்கம்

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன்லால் அவர்கள் விமானப்படை ஹீரோவான விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்கள் அன்று வடகிழக்கு டெல்லி பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் கல்லடி பட்டு டெல்லி காவல் துறை வீரரான ரத்தன் லால் அவர்கள் உயிரிழந்தார்.அவரது இழப்பு குறித்து நாடு முழுதும் சோக குரல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.அவர் விங் கமாண்டர் அபி அவர்களின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.அவரை போலவே மீசை அமைப்பும் வைத்துள்ளார்.

அவரது மீசை காரணமாகவே அவர் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பிரபலமான காவல் துறை வீரராக வலம் வந்துள்ளார்.
விங் கமாண்டர் அபி போலவே தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும் என அவர் தனது குழந்தைகளுக்கு அடிக்கடி உற்சாகமூட்டுவார்.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள பதேபூர் டிகாவலி கிராமத்தை சேர்ந்தவர் தான் ரத்தன்லால் அவர்கள்.1998ல் டெல்லி காவல்துறையில் இணைந்த அவர் பூனம் என்ற பெண்ணை 2004ல் மணந்துள்ளார்.தற்போது அவருக்கு சித்தி (13),கனக் (10), மற்றும் ராம் (8) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 “எங்கள் அப்பா என்ன தவறு செய்தார்” என மூன்று குழந்தைகளும் கமிசனரை பார்த்து கேள்வி கேட்டு கண்கலங்கியுள்ளனர்.

இது பார்ப்பவர்கள் மனதை உருகச் செய்துள்ளது.