சீன,பாக் விமானங்களை விட தலைமுறை சிறந்தது ரபேல்;விமானப்படையின் திறனை அதிகரிக்கும்-முன்னாள் தளபதி கருத்து

சீனா மற்றும் பாக் விமானப்படையில் தற்போது உள்ள விமானங்களை விட ரபேல் அரை தலைமுறை அதிக திறன் கொண்ட விமானம் என முன்னாள் விமானப்படை தளபதி பிரேந்திர சிங் தனோவா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை 36 விமானங்களை பிரான்சிடம் இருந்து ஆர்டர் செய்து தற்போது முதல் தொகுதி நான்கு விமானங்கள் இந்த வருட மே முதல் செயல்பட தொடங்கும்.

“நமது எதிரிகள் உபயோகிக்கும் நான்காம் தலைமுறை விமானங்களை விட ரபேல் 0.5 தலைமுறை அதிக திறன் கொண்டது” என முன்னாள் தளபதி தனோவா அவர்கள் கூறியுள்ளார்.

விமானப்படையின் சர்ஜிகல் தாக்குதலுக்கு பிறகான பிப் 27 வான் சண்டை பேசிய அவர் ; அது ஒரு பிவிஆர் சண்டை.கண்ணுக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் சண்டை தான் அது.யார் முதலில் பார்கின்றனரோ அவர் ஏவுகணை ஏவி சுடுவர்.அதற்கு உங்கள் விமானத்தின் சென்சார்கள், டேடோ பியுசன் மற்றும் உங்கள் வான் ஏவுகணையின் திறன் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.அந்த வகையில் ரபேல் ஆகச் சிறந்தது ஆகும் என கூறியுள்ளார்.

ரபேல் மட்டும் அந்த சண்டையில் பங்கேற்றிருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.பிரதமர் மோடியும் இதையே கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.