இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிசன்-உச்சநீதி மன்றம் கருத்து

  • Tamil Defense
  • February 17, 2020
  • Comments Off on இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிசன்-உச்சநீதி மன்றம் கருத்து

இந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பதவி எனும் டெல்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ஆதரித்துள்ளது உச்சநீதி மன்றம்.

பெண்களுக்கு உடலியல் சம்பந்தமான எல்லை மற்றும் சமூக நிலை குறித்து பேசி பெண் வீரர்களுக்கு சிறப்பாகவே செயல்பட்டாலும் சில காரணங்களுக்காக பெண்களுக்கு நிரந்த கமிசன் அரசால் வழங்கப்படவில்லை.

இராணுவத்தில் பெண்களின் நிலை அடுத்து அடுத்து பரிணாமம் பெற வேண்டும் என நீதிபதி சந்திரசுத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது பெண் வீரர்கள் குறை சேவை எனப்படும் short service commission அதிகாரிகளாக தான் நியமிக்கப்படுகின்றன.இதை முழு சேவையாக மாற்ற இந்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி நீதிமன்றம் கடந்த 2010ல் பெண்களுக்கு நிரந்தர பதவி வழங்க அரசுக்கு ஆர்டர் கொடுத்தது.ஆனால் அரசு இன்று வரை அதன் மீது விவாதித்து வருகிறது.

பெண்களுக்கு நிரந்தர பதவி வழங்காதது சமத்துவத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.கட்டளையிடும் பதவிகளில் பெண்களை நியாமிக்காதது நல்லது அல்ல என கூறியுள்ளது.

இன்னும் மூன்று மாதத்திற்குள் இதை நிறைவேற்றுமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.