
எல்லையில் பாகிஸ்தான் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நேற்று துப்பாக்கிச்சூடு நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக் கடுமையான தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு நமது பக்கம் இருந்து அதே அளவிலான பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய இராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
நாய்க் ராஜிவ் சிங் செகாவத் என்ற வீரர் தான் வீரமரணம் அடைந்துள்ளார் என இராணுவம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.நாய்க் ரஜீவ் சிங் அவர்களுக்கு வயது வெறும் 36 தான்.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டம் தெசில விராட் நகர் பகுதியில் உள்ள லுகாக்னா குர்த் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தான் நாய்க ராஜீவ்.
அவருக்கு உஷா செகாவத் என்ற மனைவி உள்ளார்.இவரது இறப்பை கேட்ட கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.நாய்க் ராஜீவ் கடமை தவறாத சிறந்த வீரர் என இராணுவம் கூறியுள்ளது.
அவரது வீரமரணம் நமக்க இழப்பு என ராணுவம் கூறியுள்ளது.
வீரவணக்கம்