அணுஆயுத வான் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்-இந்தியாவின் பிரம்மோசிற்கு இணையானதா?

  • Tamil Defense
  • February 19, 2020
  • Comments Off on அணுஆயுத வான் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்-இந்தியாவின் பிரம்மோசிற்கு இணையானதா?

அணுஆயுத வான் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்-இந்தியாவின் பிரம்மோசிற்கு இணையானதா?

அணுசக்தி உடைய க்ரூஸ் ஏவுகணையான ராட்-2 எனும் வான்ஏவு ஏவுகணையை பாக் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.600கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணையை பாக் மேம்படுத்தியுள்ளது.

உள்நாட்டு வழிகாட்டு மற்றும் நேவிகேசனல் அமைப்புகள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ள ராட்-2 இலக்குகளை துல்லியத் தன்மையுடன் தாக்க கூடியது என அந்நாட்டு இராணுவ மக்கள் செய்தி பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கடல் மற்றும் நிலம் என வானில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.இந்த சோதனை முக்கிய பாக் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பாக்கினால் தீர்க்கமான பதிலடி கொடுப்பதை இந்த ஏவுகணை சோதனை உறுதிப்பட்டுள்ளது என மூத்த பாக் அதிகாரி கூறியுள்ளார்.

சோதனையின் வெற்றிக்காக பாக் பிரதமர் மற்றும் தலைவர் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவினுடைய பிரம்மோஸ் ஏவுகணைக்கு சமமான ஒன்றாக பாக்கில் இது பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணையை மிராஜ் அல்லது எப்-16 விமானங்களில் இணைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.