
காஷ்மீர் வழியாக இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதலை பாக் நடத்தி வருவதற்கு, Financial Action Task Force (FATF) எனப்படும் அமைப்பு பாகிஸ்தானுக்கு பயங்கர அழுத்தம் கொடுத்து வருகிறது.இதனால் பாக் குழுக்கள் பஞ்சாப் வழியாக தற்போது ஆயுதங்களை கடத்தி வருகின்றன.
2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீருக்குள் அனுப்பப்படும் பல ஆயுதங்கள் பஞ்சாபில் பிடிபட்டுள்ளன.சீன ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவின் பஞ்சாபிற்குள் ஆயுதங்களை போடுவது அதிகரித்துள்ளது.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் இது அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதத்திற்குள் மட்டுமே எட்டு முறை ஆளில்லா விமானங்கள் மூலம் 80கிகி அளவுள்ள ஆயுதங்களை இந்தியாவிற்குள் அனுப்பியுள்ளது பாகிஸ்தான்.
15 ஏகே-47 துப்பாக்கிகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.10 ஏகே பஞ்சாபிலும்,5 காஷ்மீர்-பஞ்சாப் எல்லையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தவிர கைத்துப்பாக்கிகள்,குண்டுகள்,சேட்டிலைட் போன்கள்,போலி இந்திய பணம் ,கிரேனேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பல முறை இது போல கைப்பற்ற முடியாத நிலையும் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது போல பாக் ஆயுதங்களை அனுப்புவது பயமுறுத்தும் நடவடிக்கை எனவும் ,ஏனெனில் உயிரி அல்லது வேதி ஆயுதங்களை கூட இவ்வாறு அனுப்பலாம் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவத்தின் உதவியை பஞ்சாப் கோரியுள்ளது.