
ஆந்திர காவல்துறையால் தொடங்கப்பட்ட ஆபரேசன் டால்பின் நோஸ் எனும் நடவடிக்கை தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் இதுவரை 11 கடற்படை வீரர்கள் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக வலைத்தளங்கள் வழியாக கடற்படை குறித்த இரகசிய தகவல்களை எதிரி நாட்டுக்கு பரப்பியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர பாக்குடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் வீரர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நாட்டின் முக்கிய கடற்படை தளங்களான விசாகப்பட்டிணம்,கார்வார் மற்றும் மும்பை தளங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை வைத்து வீரர்களை மயக்கி அதாவது ஹானிட்ராப் என சொல்வார்கள் , வீரர்களிடம் இருந்து தகவல்களை எதிர்கள் பெற்றுள்ளனர்.முதலில் கைது செய்யப்பட்ட ஏழு வீரர்களிடம் காவல்துறை ஆய்வு நடத்திய போது அதிர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
டிசம்பரில் இந்த நிகழ்வு வெட்ட வெளிச்சமாக கடற்படை அதன் பிறகு பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்தது.அதில் ஒன்று தான் சமூக தளங்கள் கடற்படை வீரர்கள்
உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக கடற்படை வீரர்கள் தெரிவித்த நிலையில் பழைய போன்கள் உடன் 2ஜி நெட் உபயோகிக்க அனுமதி அளித்துள்ளது.போன் உபயோகம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த போன்களை இடைமறித்து கேட்கவும் முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உளவு அமைப்பை முறியடிக்க மத்திய உளவு பிரிவுகள் ஒன்றினைந்து ஆந்திரா காவல் துறையுடன் ஆபரேசன் டால்பின் நோசை பெரிய அளவில் நடத்தி வருகின்றன.