கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் ஆசையை மூழ்கடிக்கும் நீர்மூழ்கி வாங்கும் திட்டம்
1 min read

கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் ஆசையை மூழ்கடிக்கும் நீர்மூழ்கி வாங்கும் திட்டம்

கடற்படையின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் எனும் ஆசையை நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டம் மூழ்கடித்துள்ளது.கடற்படை இரண்டுமே எதிர்பார்த்து வரும் வேளையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டத்தை முன்னகர்த்தியுள்ளார்.சீனா தனது கடற்படையை அசுரவேகத்தில் பெருக்கிவரும் வேளையில் பணப்பற்றாக்குறை காரணமாக இந்தியா இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருகிறது.இரு விமானம் தாங்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் கடற்படையில் செயல்பாடு என்பது சாத்தியாகும் வேளையில் தற்போது குறைந்து வரும் நீர்மூழ்கிகளின் பலத்தை அதிகரிப்பதே முக்கியமாக உள்ளது என தளபதி ராவத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்து தனது சந்தேகத்தை தெரிவித்த தளபதி ராவத் ,அது தேவையெனும் போது பெறப்படும்.இன்றிலிருந்து இன்னும் பத்து வருடங்களில் என்ன நடக்கிறதோ அதை நாம் அறிய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

அடுத்த திட்டம் உள்நாட்டிலேயே அணுசக்தி நீர்மூழ்கி தயாரிப்பது தான்.ஆறு அடுத்த தலைமுறை அணுசக்தி நீர்மூழ்கிகள் இந்தியாவிலேயே கட்டப்படும்.இந்தியா ஏற்கனவே அணுசக்தி நீர்மூழ்கிகளை இயக்கி வருகிறது.மேலும் அவற்றில் பல அனுபவங்களையும் கொண்டுள்ளது.நான்கு அரிகந்த் ரக கப்பல்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.கே-4 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியா தனது நீரடி பிரிவை மறுகட்டுமானம் செய்து வரும் வேளையில் நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் உள்ள திட்டம் தான் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் என்ற திட்டம்.விசால் என பெயர் கூட சூட்டப்பட்டும் திட்டம் கிடப்பிலேயே உள்ளது.

சீனா நீர்மூழ்கிகளை கட்டி இணைத்து வரும் வேளையில் விமானம் தாங்கி கப்பல்களையும் இணைத்து தான் வருகிறது.மறுபுறம் பாக் சீனாவிடம் இருந்து எட்டு நீர்மூழ்கிகளை ஏஐபி அமைப்புடன் பெறுகிறது.ஆனால் இந்தியா கட்டி வரும் நவீன ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளில் ஏஐபி அமைப்பு இல்லை.டிஆர்டிஓ பியுவல் செல் ஏஐபி அமைப்பு மேம்படுத்தி வருகிறது.ஆனால் அது முடிந்தபாடில்லை.இனி ஏஐபி மேம்பாடு முடிந்து ஸ்கார்பினில் இணைத்து சோதனை செய்வதற்கு இரு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம்.