இராணுவத்திற்கான பிரம்மாண்ட இராணுவ தலைமையகம்-இராணுவ அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • Tamil Defense
  • February 23, 2020
  • Comments Off on இராணுவத்திற்கான பிரம்மாண்ட இராணுவ தலைமையகம்-இராணுவ அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

கடந்த வெள்ளியன்று இராஜ்நாத் சிங் அவர்கள் புதிய இராணுவ தலைமையகத்திற்கான அடிக்கல்லை டெல்லி கன்டோன்மென்டில் நாட்டினார்.இந்த நிகழ்வில் பேசிய அவர் உலக நாடுகள் இந்தியாவை ஒரு சக்திமிக்க நாடாக அங்கீகரித்துள்ளனர் என பேசியுள்ளார்.

“தல் சேனா பவன்” என அழைக்கப்படவுள்ள இந்த புதிய தலைமையகம் 39 ஏக்கரில் மிகப் பெரிய அளவில் கட்டமைக்கப்பட உள்ளது.

இந்தியா வலிமை குன்றிய நாடு அல்ல அது ஆகப் பெரிய வலிமையுடைய நாடு என உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக அவர் பேசினார்.இது வரை சுதந்திரத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களை இது நினைவு படுத்தும் எனவும் பேசியுள்ளார்.
வலிமையுள்ள நமது வீரர்களையே இந்த புகழ் சேரும் என அவர் பேசியுள்ளார்.

நான்கு மத மதகுருமார்கள் வாழ்த்தொலிகள் கூற பூமி பூஜை நடைபெற்றது.வீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை.உலகின் இன்று இந்தியா வலிமைமிகுந்த நாடு என புகழ்ந்துள்ளார் அமைச்சர் இராஜ்நாத் அவர்கள்.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி நரவனே அவர்களும் இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.இந்த மொத்த கட்டிடமும் 700 கோடிகள் செலவில் கட்டப்பட உள்ளது.

ஐந்து வருடத்திற்குள் இந்த கட்டிடம் கட்டி எழுப்பப்படும் எனவும் , அலுவலகங்களுடன் வசிக்கும் பகுதிகள் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1700 அதிகாரிகளும்,1300 துணை ஸ்டாப்களும் இந்த கட்டிடத்தில் தங்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.