கோவாவில் மிக்-29கே விமானம் விபத்து

இந்திய கடற்படையின் மிக்-29கே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படையின் மிக் விமானம் கோவாவில் தினசரி கண்காணிப்பு பணிக்காக பறந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

ஞாயிறு அன்று காலை 10:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.விமானி பத்திரமாக வெளியேறி தற்போது மீட்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது கடற்படை.கடந்த மூன்று மாதத்தில் இது இரண்டாவது மிக-29 விபத்து ஆகும்.