புல்வாமா வீரர்களுக்கு நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? சிஆர்பிஎப் மறுப்பு

  • Tamil Defense
  • February 22, 2020
  • Comments Off on புல்வாமா வீரர்களுக்கு நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? சிஆர்பிஎப் மறுப்பு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நிதி உதவிகள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை.

“புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.வீரமரணத்திற்கு பணம் ஈடு இல்லையெனினும் வீரர்களின் உற்றவர்களுக்கு தேவையான நிதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்” என சிஆர்பிஎப் கூறியுள்ளது.

40 சிஆர்பிஎப் வீரர்களின் அடுத்த வாரிசு எனப்படும் next of kins (NOKs) க்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் கூறியுள்ளது.

இது தவிர மாதந்திர உதவி தொகையும் வழங்கப்படுவதாக சிஆர்பிஎப் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.16 கோடிகள் முதல் 3.24 கோடிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் கூறியுள்ளது.

19 வீரர்களுக்கு CREDAI பிளாட்கள் வழங்கியுள்ளது.மற்ற வீரர்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது.

27 வீரர்களின் வாரிசுகளுக்கு தேவைக்கு ஏற்ப கல்வி உதவிகளை வழங்க ரிலயன்ஸ் பௌண்டேசன் உறுதி அளித்துள்ளது.

17 வீரர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசால் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என சிஆர்பிஎப் கூறியுள்ளது.