Breaking News

கடத்தல் எதிர்ப்பு பயிற்சி-தங்கள் திறமையை வெளிப்படுத்திய மரைன் கமாண்டோ வீரர்கள்

  • Tamil Defense
  • February 13, 2020
  • Comments Off on கடத்தல் எதிர்ப்பு பயிற்சி-தங்கள் திறமையை வெளிப்படுத்திய மரைன் கமாண்டோ வீரர்கள்

பிப்ரவரி 12 அன்று விசாகப்பட்டிணத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகா தளத்தில் கடத்தல் எதிர்ப்பு/தடுப்பு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.இதில் பல படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

கடற்படையின் சிறப்பு படையான மரைன் கமாண்டோ வீரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் மாநில படை வீரர்கள் இணைந்து இந்த கடத்தல் எதிர்ப்பு போர்பயிற்சியை மேற்கொண்டனர்.

கடத்தல் எனும் போது படைகள் முழுதும் இணைந்து ஒற்றுமையாக திட்டமிட்டு அதை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்வது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.அதாவது படைகளினுடைய ஒருங்கிணைப்பு தன்மையை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்.

இதற்காக கடற்படையின் டோர்னியர் விமானம் ஒன்று பயன்படுத்தப்பட்டது.பயிற்சியின் முடிவில் ஸ்டேன்டர்ட் ஆபரேசன் புரோசிசர் எனப்படும் எஸ்ஓபி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

தேசிய சிவில் ஏவியேசன் பாதுகாப்பு புரோகிராம் வருடம் தோறும் அனைத்து இந்திய ஏர்போர்டிலும் இது போன்ற பாதுகாப்பு பயிற்சிகளை நடத்த ஊக்குவிக்கிறது.