
இந்தியாவின் Kalyani Group முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ள DefExpo2020 என்னும் இராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளது.அதில் தனது புதிய ஆர்டில்லரி
அமைப்பான Mountain Artillery Gun (MArG) Extended Range Ultra-Light Howitzer with 155 mm / 52 caliber long-range ULH in towed version-ஐ காண்பிக்க உள்ளது. இதே ஆர்டில்லரியின் MArG 155 mm / 39 caliber ரகத்தயும் காண்பிக்க உள்ளது.MArG ஆர்டில்லரி Steel மற்றும் Titanium என்னும் இரு ரகத்திலும் வரும்.
ஸ்டீல் ரக துப்பாக்கி 6.8 tons மற்றும் டைட்டானியம் ரகம் சற்று எடை குறைவானதாக 5 tons அளவில் இருக்கும். ஏற்கனவே இருந்த தளபதி ராவத் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க Truck-mounted all steal MArG 155 mm / 39 caliber ULH அமைப்பையும் கல்யானி
மேம்படுத்தியுள்ளது.இந்த அமைப்பும் இராணுவ கண்காட்சியில் இடம்பெற உள்ளது. 52 caliber barrel கொண்ட Ultra-Light Howitzer ஆர்டில்லரி உயர் மலைப்பகுதியில் கனஎடை தனுஷ் அளவிற்கு செயல்பட வல்லது என இராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தியா பெற்றுள்ள Excalibur shells தற்போதுள்ள 155/39 caliber gun துப்பாக்கியான M-777 அல்லது MArG துப்பாக்கிகளில் சுடும் போது செல்லும் தொலைவை விட MArG Extended Range ULH ல் வைத்து சுடும் போது கிட்டத்தட்ட 50km வரை சென்று தாக்கும்
தற்போது இந்த புதிய ஆர்டில்லரி துப்பாக்கி அனைத்து சோதனைகளையும் கடந்து தற்போது இராணுவத்திற்கு அளிக்க முடிவு செய்துள்ளது.