
2018ல் இருவரும் மணம் புரிந்து மிகக் குறுகிய காலமே சேரந்திருந்திருந்தனர்.கடமை அழைக்க தொடர்ச்சியாக காஷ்மீரில் பணியாற்ற சென்றுவிட்டார்.நாட்டுக்காக மேஜர் விபுதி தோந்தியால் வீரமரணம் அடைந்த போது அவருக்கு வயது 35 தான்.
அவரது மனைவி நிகிதா கௌல் தோந்தியால் தற்போது எஸ்எஸ்சி தேர்வு தேர்வு பெற்று விரைவில் இராணுவ உடை அணிய உள்ளார்.பயங்கரவாதிகளுடன் வீரமுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த ஒரு வருடத்திற்கு பிறகு அவரது மனைவி இராணுவத்திற்குள் நுழைய தேர்ச்சி பெற்றுள்ளார்.
புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான 20மணி நேர சண்டையில் 55வது இராஷ்டீரிய ரைபிள்சை சேர்ந்த மேஜர் விபுதி தோந்தியால் வீரமரணம் அடைந்தார்.மூன்று சக வீரர்களை காப்பாற்றி விட்டு அவர் வீரமரணம் அடைந்துவிட்டார்.
தற்போது நொய்டாவில் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிகிதா விரைவில் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற உள்ளார்.