ஏகே-47 குண்டுகளை தடுத்து நிறுத்தும் தலைக்கவசம்- நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மேஜரின் கண்டுபிடிப்பு
இந்திய இராணுவத்தின் மேஜராக இருப்பவர் தான் மேஜர் அனுப் அவர்கள்.மேஜர் தான் தற்போது ஏகே குண்டுகளை தடுத்து நிறுத்த கூடிய தலைக்கவசத்தை மேம்படுத்தியுள்ளார்.10மீ தூரத்தில் இருந்து ஏகேயில் சுட்டாலும் தடுத்து நிறுத்தக் கூடிய உலகின் ஒரே தலைக்கவசமாக இதை உருவாக்கியுள்ளார்.ஒரு தலைக்கவசத்தின் எடை 1.4கிகி தான்.
இந்திய இராணுவத்தின் மிலிட்டரி இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த தலைக்கவசத்தை மேஜர் அவர்கள் மேம்படுத்தியுள்ளார்.அவர் ஏற்கனவே ஸ்னைப்பர் குண்டுகளை தடுத்து நிறுத்தக் கூடிர சர்வத்ரா எனும் குண்டு துளைக்கா உடையையும் மேம்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபித்யா எனும் திட்டத்தின் கீழ் மேஜர் அனுப் மிஷ்ரா அவர்கள் இந்த தலைக்கவசத்தை மேம்படுத்தியுள்ளார் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் டிசைன் பீரோ எக்சலன்ஸ் எனும் விருது ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சர்வத்ரா குண்டு துளைக்காத உடைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.