வியட்நாம் நாட்டிற்கு அதிவேக ரோந்து கப்பலை டெலிவரி செய்யும் எல்&டி

  • Tamil Defense
  • February 17, 2020
  • Comments Off on வியட்நாம் நாட்டிற்கு அதிவேக ரோந்து கப்பலை டெலிவரி செய்யும் எல்&டி

வியட்நாம் நாட்டிற்கு அதிவேக ரோந்து கப்பலை டெலிவரி செய்யும் எல்&டி

வியட்நாம் நாட்டிற்காக இந்தியாவினுடைய லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கட்டிய முதல் அதிவேக ரோந்து கப்பலை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஜேடி பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளார்.வியட்நாம் நாடு 12 இது போன்ற கப்பல்களை பெற உள்ளது.

“முதல் கப்பல்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்படும்.ஐந்து கப்பல்களை எல்&டி தயாரிக்கும் வேளையில் மற்ற கப்பல்கள் வியட்நாமில் தயாரிக்கப்படும்.2021க்குள் அனைத்தும் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பாட்டில் அவர்கள் கூறியுள்ளார்.

வியட்நாம் பல இந்திய இராணுவ தளவாடங்கள் மீது விருப்பும் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு,த்ருவ் வானூர்திகள்,பிரம்மோஸ் என பல இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா முயற்சித்து வருகிறது.

இது தவிர வங்கதேசத்திடம் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்த்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.