இந்தியா சொந்தமாகவே மேம்படுத்தியுள்ள தொழில்நுட்ப ஆச்சரியம் தான் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையான சக்தி ஏசாட் ஏவுகணை.இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனும் டிஆர்டிஓ தான் இந்த ஏவுகணையை மேம்படுத்தியது.
கடந்த மார்ச் 2019 அன்று வான்வெளியில் சுற்றிய ஒரு செயற்கைகோளை நேரடியாக தாக்கி இந்த ஏவுகணை தனது திறனை நிரூபித்தது.அதன் பிறகு 2020 குடியரசு தின விழாவிலும் இந்த ஏவுகனண அணிவகுப்பில் இடம்பெற்றது.
தற்போத இந்த ஏவுகணையை குறைந்த அளவில் தொடர் தயாரிப்பிற்கு உள்ளாக்கப்பட உள்ளது.இதன் மூலம் எதிரிகளின் பாதுகாப்பு செயற்கைகோள்களை எளிதாக சுட்டு வீழ்த்த முடியும்.போரின் போது இராணுவ செயற்கைகோள்களின் தேவை என்பது மறுப்பதற்கில்லை.எதிரியின் செயற்கைகோளை அழிப்பதன் மூலம் அவனை கிட்டத்தட்ட குருடனாக்க முடியும்.
அதிக அளவு தயாரிப்போ அல்லது குறைந்த அளவு அதற்கான அனுமதியை இந்திய அரசு அளித்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசன் சக்தி என்னும் திட்டத்தின் கீழ் இந்த ஏவுகணை நேரடியாக பரிசோதனை செய்யப்பட்டது.ஈந்த ஏவுகணை 18.87 டன்கள் எடையுடையது.மூன்று நிலை இடைமறிப்பு ஏவுகணை ஆகும்.இரு நிலை திட புரோபல்சன் ராக்கெட் மோர்ட்டார்கள் கொண்டுள்ளது.
முதல் நிலை ஏவுகணையை முதலில் வானுக்கு எடுத்து செல்லும்.இது 13.164மீ நீளமும் ,1.4மீ அகலமும் கொண்டது.74.8 நொடிக்கு செயல்பட்டு ஏவுகணையை வானில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு கொண்டு சென்ற பிறகு இரண்டாம் நிலை செயல்பட தொடங்கும்.37.7 நொடிக்கு இது செயல்பட்டு ஏவுகணையை மேலதிக உயரத்திற்கு கொண்டு செல்லும்.
உலகிலேயே வெகுசில நாடுகள் மட்டுமே இது போன்ற செயற்கை கோள்களை அழிக்க கூடிய ஏவுகணை தொழில்நுட்பத்தை பெற்றுள்ளனர்.