பயங்கரவாத ஏவு தளங்கள் நிரம்பி வழிவதாக தகவல்; பதிலடி பயங்கரமாக இருக்கும்-லெப் ஜென் தில்லான் மிரட்டல் பதிலடி

  • Tamil Defense
  • February 19, 2020
  • Comments Off on பயங்கரவாத ஏவு தளங்கள் நிரம்பி வழிவதாக தகவல்; பதிலடி பயங்கரமாக இருக்கும்-லெப் ஜென் தில்லான் மிரட்டல் பதிலடி

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவு தளங்கள் நிரம்பி வழிகின்றன.துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்தி இவர்களை இந்தியாவிற்குள் அனுப்ப பாக் முயற்சி செய்வதாகவும் அதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி அளிப்போம் என லெப் ஜென் தில்லான் அவர்கள் கூறியுள்ளார்.

பாக் இவர்களை இந்தியாவிற்குள் அனுப்பும் முயற்சியில் வெற்றி பெறாது என 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் அவர்கள் உறுதிபட கூறியுள்ளார்.

முறைமுகமாக இந்தியா மீது பாக் தொடுத்து வருவதாகவும் அதை அனைத்து வழிகளிலும் இந்தியா முறியடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கின் அத்துமீறிய துப்பாக்கி சூடுகளுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் உள்ள மற்ற படைகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவம் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.