மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் வஜ்ரா- ஆர்டர் முடிவால் தொழில்சாலை முடங்கும் பரிதாப நிலை

  • Tamil Defense
  • February 8, 2020
  • Comments Off on மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் வஜ்ரா- ஆர்டர் முடிவால் தொழில்சாலை முடங்கும் பரிதாப நிலை

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திலேயே சிறந்த ஒன்றாக கருதப்படுவது கே-9 வஜ்ரா தயாரிப்பு தான்.உள்நாட்டு தயாரிப்பு வேகம் எப்படி இருக்க வேண்டும் என் உதாரணமாக காட்டப்படும் வஜ்ரா தயாரிப்பு இன்னும் ஆறு மாதத்திற்குள் முடிவடைய உள்ளது.இதனால் தொழில்சாலை செயல்படாமல் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலதிக ஆர்டர் ஏதும் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வஜ்ரா ஒரு 155 mm ஹொவிட்சர் ஆகும்.சர்வதேச டென்டராக அறிவிக்கப்பட்டு 2017ல் இந்த டென்டரை லான்சன் & டூப்ரோ நிறுவனம் வென்றது.கிட்டத்தட்ட 70 நாடுகள் இதில் பங்கேற்றன.

100 அமைப்புகள் கிட்டத்தட்ட 4500 கோடிகள் செலவில் வாங்கப்பட்டன.குஜராத்தில் உள்ள ஹசிரா என்னுமிடத்தில் இந்த ஹொவிட்சர்களை எல்&டி தயாரித்து வருகிறது.தற்போது ஆர்டர் ஆறு மாதத்திற்குள் முடியும் நிலயைில் உள்ளதால் இதன் பிறகு தொழில்சாலை இயங்காமல் நிறுத்தப்படும் என எல்&டி தெரிவித்துள்ளது.ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“நாங்கள் மேலதிக ஆர்டருக்காக காத்திருக்கிறோம்.ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.விரைவில் வேலை இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.நிலை தொடர்ந்தால் ஹசிராவில் பணிபுரிபவர்களை மற்ற இடங்களுக்கு அனுப்பிவிடுவோம்”
L&T போர்டு மேம்பர் பாட்டில் தெரிவித்துள்ளார்.

மற்ற நட்பு நாடுகளுக்கு இந்த வஜ்ராவை ஏற்றுமதி செய்வதன் மூலம் தொழிற்சாலையை தொடர்ந்து இயங்க வைக்க முடியும் நம்பிக்கை தெரிவித்துள்ளது எல்&டி.அதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

“பாலைவனத்தில் இயங்கும் ஆர்டில்லரிகளோ அல்லது அணு,உயிரி மற்றும் வேதியல் எனப்படும் நிலைகளில் இயங்கும் ஆர்டில்லரிகளோ இராணுவத்திற்கு தேவைப்பட்டால் நாங்கள் இந்திய தயாரிப்பு வஜ்ராவை அளிக்க முன்வருவோம்.ஏனெனில் வஜ்ரா இராணுவத்தால் பலவாறாக சோதனை செய்யப்பட்டுள்ளது ” என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தென்கொரியாவின் ஹன்வா நிறுவனமும் கே9 ஆர்டில்லரிகளை தயாரிக்கிறது.ஹன்வா நிறுவனமும் ,எல்&டி நிறுவனமும் இணைந்து தான் வஜ்ராவை இந்தியாவில் தயாரிக்கிறது எனினும் இந்திய பாலைவனத்தில் செயல்பட இந்தியத் தயாரிப்பு வஜ்ராவே சிறந்தது என எல்&டி கூறியுள்ளது.
எனவே இதை ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

தற்போது வரை 50க்கும் மேல் வஜ்ராவை டெலிவரி செய்துள்ளது எல்&டி.

இந்த ஹொவிட்சர்கள் பாக் எல்லையில் நிலைநிறுத்தப்படும்