டேங்க் எதிர்ப்பு ஏவுகணை மேம்படுத்தியுள்ள தனியார் நிறுவனம்-ஆச்சரியமளிக்கும் விசயங்கள்
1 min read

டேங்க் எதிர்ப்பு ஏவுகணை மேம்படுத்தியுள்ள தனியார் நிறுவனம்-ஆச்சரியமளிக்கும் விசயங்கள்

இந்திய தனியார் நிறுவனமான
VEM டெக்னாலஜி நிறுவனம் மனிதனால் ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது.அதற்கு “ஆசிபல்” எனப் பெயரிட்டுள்ளது.
அமெரிக்காவின் “ஜாவலின்” ஏவுகணையை விட இலகுவாகவும் ,டிஆர்டிஓ தயாரித்து வரும் இதே போன்ற அமைப்புக்கு இணையானதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வீரரே ஏந்திச் செலுத்தும் வண்ணம் இந்த அமைப்பு மேம்படுத்தியுள்ளது.தற்போது நடைபெற்று முடிந்துள்ள ராணுவ கண்காட்சியில் தனது புதிய ஏவுகணை அமைப்பை காட்சிப்படுத்தியிருந்தது.

ஆசிபால் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையின் லாஞ்ச் யூனிட் 6கிகி தான்.ஏவுகணை 18.5கிகி தான்.முழு ஏவுகணை அமைப்பும் 23-25க்குள் இருக்கும் என்பதால் இரு வீரர்களே இதை இயக்க போதுமானாதாகும்.

ஆசிபால் ATGM தெர்மோகிராபிக் காமிரா மற்றும் டூயல் மோடு இன்பிராரெட் சீக்கர் கொண்டுள்ளது.இந்த ஏவுகணை அமைப்பை ரோந்து வாகனங்களிலும் இணைக்கலாம்.