புதிய ஆறு அணுசக்தி நீர்மூழ்கிகள் கட்ட திட்டம்; வேகமாக திட்டத்தை நகர்த்தும் இந்தியா-கடற்படையின் சக்தியை அதிகரிக்க முடிவு

  • Tamil Defense
  • February 21, 2020
  • Comments Off on புதிய ஆறு அணுசக்தி நீர்மூழ்கிகள் கட்ட திட்டம்; வேகமாக திட்டத்தை நகர்த்தும் இந்தியா-கடற்படையின் சக்தியை அதிகரிக்க முடிவு

புதிய ஆறு அணுசக்தி நீர்மூழ்கிகள் கட்ட திட்டம்; வேகமாக திட்டத்தை நகர்த்தும் இந்தியா-கடற்படையின் சக்தியை அதிகரிக்க முடிவு

எதிர்காலத்திற்கு தேவையான அணுசக்தி நீர்மூழ்கிகளை சுமார் 1.2லட்சம் கோடியில் கட்ட இந்தியா தற்போது திட்டமிட்டு வருகிறது.

கட்டப்படவுள்ள ஆறு நீர்மூழ்கிகளும் அணுசக்தியால் இயங்கும் ஆனால் அவற்றினுள் அணுஆயுத ஏவுகணைகள் இருக்காது.மாறாக கன்வென்சனல் ஏவுகணைகள் மற்றும் டோர்பிடோக்கள் இருக்கும்.எல்லாம் திட்டமிட்டப்படி சரியாக சென்றால் அடுத்த பத்து ஆண்டுக்குள் முதல் நீர்மூழ்கி தயாராகிவிடும்.

முதற்கட்ட வடிவமைப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் கடினமான அடுத்த கட்ட உள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளுக்கான வேலைகள் நேவல் டிசைன் இயக்குநகரத்தால் தொடரப்பட உள்ளது.இதற்கு டிஆர்டிஓ-வும் உதவும்.

தற்போது விசாகப்பட்டிணத்தில் அரிகந்த் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன.நான்காவது நீர்மூழ்கி தனது கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது.இது முடிவடையும் நேரத்தில் அடுத்த தலைமுறை புதிய நீர்மூழ்கள் கட்டுமானம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இரண்டாவது அரிகந்த் நீர்மூழ்கியான அரிகத் இந்த வருட இறுதியில் படையில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அடுத்த இரு நீர்மூழ்கிகளும் 2024 வாக்கில் படையில் இணையும்.

இதற்குள் இந்த புதிய நீர்மூழ்கிகளுக்கான வடிவமைப்பு பணிகள் முடிந்துவிடும்.அடுத்து விசாகப்பட்டிணத்தில் இதற்கான கட்டுமானத்தையும் தொடங்கிவிடலாம்.ஏற்கனவே அரிகந்த் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பில் இந்தியாவிற்கு படிப்பினைகள் இருப்பதால் இந்த புதிய நீர்மூழ்கிகளை அதை விட குறுகிய கால அளவில் கட்டி விடலாம்.

அணுசக்தி நீர்மூழ்கிகள் பல மாதங்கள் கூட செயல்பட வல்லது.உணவு பற்றாக்குறை வருமே தவிர எரிபொருள் பற்றாக்குறை இருக்காது.அமெரிக்கா கிட்டத்தட்ட 50+ இது போன்ற நீர்மூழ்கிகளை வைத்துள்ளது.சீனாவோ பத்து வைத்துள்ளது மற்றும் மேலம் அதிகரித்து வருகிறது.