ஒப்பந்தம் தாமதம்,நீண்ட கால பரிசீலனை , நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படும் இந்திய படைகள் நவீனப்படுத்தும் திட்டம்

  • Tamil Defense
  • February 13, 2020
  • Comments Off on ஒப்பந்தம் தாமதம்,நீண்ட கால பரிசீலனை , நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படும் இந்திய படைகள் நவீனப்படுத்தும் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 250 பில்லியன் டாலர்கள் இந்திய இராணுவப் படைகளின் நவீனப்படுத்தும் திட்டத்திற்காக உலக நாடுகள் இந்தியாவிற்கு தங்கள் நவீன தளவாடங்களை விற்க வரிசையாக நிற்கும் நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் ஏற்படும் நேரவிரயம் மற்றும் பணப்பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்காக போக்குவரத்து விமானங்கள் வாங்க போடப்பட்ட 1.7 பில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தத்தை ஏர்பஸ் நிறுவனம் கடந்த 2015ல் வென்றது.1962க்கு பிறகு ஒரு தென்னாசிய நாட்டுக்கு தனது தளவாடத்தை ஏர்பஸ் அளிப்பது இதுவே முதல் முறை.ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவே இல்லை.

சீனா மற்றும் பாகிஸ்தான் என இந்தியாவிற்கு இரு முனை அச்சுறுத்தல் என்றுமே உள்ள நிலையில் இந்த பாதிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.இராணுவச் செலவினங்களில் உலகில் நான்காவது நாடாக இருந்தாலும் நமது படைகள் பெரும்பாலும் பழைய ஆயுதங்களை தான் உபயோகிக்கின்றன.

இராணுவ தளவாட கொள்முதல் செயல்பாடுகளை முற்றிலும் மறுபரிசோதனை செய்ய வேண்டும் என ஆசிய பசிபிக் இராணுவ வல்லுநர் ஜான் கிரேவிட் தெரிவித்துள்ளார்.தளவாடங்கள் இறக்குமதி அனுமதி செயல்முறை சிக்கலான அமைப்பில் உள்ளது.மற்றும் திட்டங்களுக்கு தேவையான நிதிபற்றாக்குறையும் தளவாட இறக்குமதியை தாமதப்படுத்துகின்றன என அவர் கூறியுள்ளார்.மோடி அரசு பெரிய மாற்றங்களை கொண்டு வந்தாலும் நம்மால் தாமதங்களை காணவே முடிகிறது என அவர் கூறியுள்ளார்.

60% இராணுவ செலவுகள் வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சென்று விடுகிறது.மீதமுள்ளவை முன்னாள் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு வழங்கவே போதியதாக உள்ளது.எதிர்கால திட்டங்களுக்கு பணம் வழங்க போதாமல் போகிறது.

அரசியல் தலைமைக்கு புதிய ஆயுதங்கள் தேவைக்கான காரணம் தெரிகிறது.1980களுக்கு பிறகு நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது தான் புதிய ஆர்டில்லரிகள் இணைக்கப்படுகின்றன.

புதிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்த பரிசீலனை பத்தாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிந்த பாடில்லை.