இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே இரகசிய விமானங்கள் தயாரிக்க திட்டமிடும் டிஆர்டிஓ

  • Tamil Defense
  • February 11, 2020
  • Comments Off on இந்திய விமானப்படைக்காக உள்நாட்டிலேயே இரகசிய விமானங்கள் தயாரிக்க திட்டமிடும் டிஆர்டிஓ

இராணுவக் கண்காட்சியில் இதனை உறுதிப்படுத்தியுள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தியவிமானப்படைக்காக உளவு,கண்காணிப்பு மற்றும் இலக்கை கண்டறியும் ரேடாரை கல்ப்ஸ்ட்ரீம் அல்லது பம்பார்டியர் விமானத்தில் இணைத்து இந்த இரகசிய விமானத் தயாரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.இது போன்ற நான்கு விமானங்கள் உருவாக்கப்படும் என டிஆர்டிஓ கூறியுள்ளது.

விமானப்படைக்கு மட்டுமல்லாது தேசிய தொழில்நுட்ப ஆராய்சி நிறுவனத்திற்கும் விமானத்தை டிஆர்டிஓ தயாரித்து வழங்க உள்ளது.

விமானப்படைக்கு அவசர தேவையாக உள்ளதால் தற்போது அமெரிக்காவின் ரேத்தியான் ISTAR விமானத்தை அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் 1 பில்லியன் டாலர் செலவில் இரு விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானப்படைக்கு மூன்று விமானங்களையும் ,தேசிய தொழல்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரு விமானமும் தயாரிக்க இருந்து டிஆர்டிஓ.தற்போது விமானப்படைக்கு ரேத்தியான் வழங்க உள்ள இரு ISTAR விமானங்களும் Gulfstream G550 பிசினஸ் ஜெட் விமானத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

டிஆர்டிஓ தயாரிக்க உள்ள இஸ்தார் விமானமும் இந்த கல்ப்ஸ்ட்ரீம் 550ஐ அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகிருந்த நிலையில் இராணுவக் கண்காட்சியில் டிஆர்டிஓ காட்சி படுத்தியிருந்த ஸ்கேல் மாடல் பம்பார்டீயர் குளோபல் 6000 பிரைவேட் ஜெட்டை அடிப்படையாக கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்தார் விமானம் எதிரிகளின் சிக்னல்களை வழிமறித்து தரையில் இருக்கும் நமது கமாண்டர்களிடம் அவர்கள் என்ன ஆயுதம் உபயோகிக்கின்றனர் அதற்கு நாம் எதை கொண்டு பதிலடி கொடுத்தால் நல்லது என்பதை கமாண்டர் சிந்திக்கும் அளவு தகவல்களை திரட்டி தர வல்லது.

தவிர நம் எல்லைக்குள் இருந்து கொண்டே எதிரியின் நிலப்பரப்பை நன்றாக அறிய முடியும்.உதாரணமாக பாக் தனது போர் டேங்கி படை பிரிவை இருளில் இந்தியாவின் ஏதேனும் ஒரு எல்லைக்குள் நகர்த்துகிறது என கொள்வோம்.அப்படி இருக்க நாம் இந்த இஸ்தார் விமானத்தை ஏவும் பட்சத்தில் அந்த இருளில் கூட அது என்ன டேங்க்.எத்தனை டேங்க்.எங்கு நகர்கிறது.எவ்வளவு வீரர்கள்.எவ்வளவு வேகத்தில் நகர்கிறது.அதை தடுக்க நாம் என்ன வகையான ஆயுதங்களை செலுத்த வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்து தகவல்களையும் நமது படைகளுக்கு தந்துவிடும்.

இந்தியாவிடம் ஏற்கனவே மூன்று விமானங்கள் உள்ளன.இஸ்ரேல் தயாரிப்பில் உருவான அவற்றை தற்போது நமது உளவுப்பிரிவான “ரா” இயக்குகிறது.