பாக்கின் பேட் பயங்கரவாதிகள் ஊடுவுவதற்கு முன்பே அழிக்கப்படுவர்-இராணுவ தளபதி நரவனே உறுதி

பாக் இராணுவத்தின் பேட் பயங்கரவாத குழுக்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்த்துவதற்கு முன்பே அழிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என தளபதி நரவனே அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கான உளவு தகவல்களை நாங்கள் தொடர்ந்து பெற்ற வண்ணம் உள்ளோம் எனவும் தாக்குதல் நடத்த அவர்கள் கிளம்பும்போதே அவர்கள் அழிக்கப்படுவார்கள் என தளபதி தெரிவித்துள்ளார்.

பாக்கின் பேட் படை என்பது பாக் இராணுவமும் ஜெய்ஸ் ,லஷ்கர் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் இணைந்த அமைப்பாகும்.இவர்கள் எல்லையில் ரோந்து செல்லும் வீரர்கள் மீது அதிர்ச்சி தாக்குதலை நடத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவர்.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போது 15-20 முகாம்களில் இருந்து சுமார் 250-350 பயங்கரவாதிகள் எந்நேரமும் ஊடுருவ தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.