நீண்டநாள் காத்திருப்பு முடிவு;ஆயுதம் ஏந்தி செல்லும் ஆளில்லா விமானம் விரைவில் இந்தியா வருகிறது

  • Tamil Defense
  • February 25, 2020
  • Comments Off on நீண்டநாள் காத்திருப்பு முடிவு;ஆயுதம் ஏந்தி செல்லும் ஆளில்லா விமானம் விரைவில் இந்தியா வருகிறது

அமெரிக்காவின் ஜெனரல் அடோமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 30 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் பெறுவதற்கான வேலைப்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 3 பில்லியன் டாலர்கள் செலவில் இதற்கான ஒப்பந்தம் தயாராகிறது.

முப்படைகளும் தலா பத்து என்ற வீதம் MQ-9 Reaper அல்லது Predator-B High அதிஉயர் நெடுந்துர ஆளில்லா விமானங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறும்.இந்த ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களோடு அதற்கான ஏவுகணைகளையும் விற்க ட்ரம்ப் அரசு அனுமதி அளித்துள்ளது.

முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ள விமானங்கள் அந்தந்த படைகளுக்கு ஏற்ப மாற்றமுடன் இருக்கும்.இந்திய கடற்படைக்கு நீண்ட நெடிய கடற்பகுதிகளை கண்காணிக்க இந்த ட்ரோன்கள் உதவும்.ஏற்கனவே உள்ள பி-8ஐ விமானங்களுடன் இந்த ட்ரோன்கள் கடற்படையின் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும்.

ஒரு முழு அளவிலான ட்ரோன் ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் 200 மில்லியன் டாலர்கள் செலவாகும்.இது ஒரு விமானத்தின் விலையை விட அதிகம்.இந்த ட்ரோன்கள் 40000 அடி உயரத்தில் 35மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் பெற்றது.