
ஐஎன்எஸ் சிந்துவீர் எனும் நீர்மூழ்கியை மியான்மர் கடற்படைக்கு இந்தியா வழங்க உள்ளது.அதற்காக அந்த நீர்மூழ்கியை மறுகட்டுமானம் செய்த ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தனது பணியை முடித்தமையால் தற்போது விரைவில் இந்த நீர்மூழ்கியை மியான்மர் நாட்டுக்கு இந்தியா வழங்க உள்ளது.இரஷ்ய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.இந்த நீர்மூழ்கியுடன் தனது முதல் நீரடி படைப்பிரிவை மியான்மர் துவக்கஉள்ளது.
கடந்த 2017 அன்று இந்த நீர்மூழ்கி மறுகட்டுமான பணிகளுக்காக அனுப்பப்பட்டு தற்போது பெறப்பட்டுள்ளது.இன்னும் சில வாரங்களில் இந்த நீர்மூழ்கி மியான்மர் கடற்படைக்கு மாற்றப்படும்.
இரஷ்யாவிடம் இருந்து இந்த கிலோ ரக நீர்மூழ்கிகளை இந்திய கடற்படை 1986 முதல் 2000ம் ஆண்டு காலகட்டத்தில் படையில் இணைத்தது.ஐஎன்எஸ் சிந்துரக்சக் 2013ம் ஆண்டு நடைபெற்ற வெடிவிபத்தோடு படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.தற்போது சிந்துவீர் மியான்மருக்கு வழங்கப்பட்டதோடு மீதம் எட்டு நீர்மூழ்கிகள் கடற்படையில் உள்ளன.
இரஷ்யாவில் 27மாத மறுகட்டுமானப்பணிகள் முடிந்து கடந்த வருடம் தான் ஐஎன்எஸ் சிந்துகேசரி இந்தியா திரும்பியது. இதே போல ஐஎன்எஸ் சிந்துராஜ் நீர்மூழ்கியும் இரஷ்யாவில் மறுகட்டுமாணம் செய்யப்பட்டு கடந்த வருடம் இந்தியா திரும்பி தற்போது செயல்பாட்டில் உள்ளது.