39000 கோடியில் 83 தேஜஸ் வாங்க விமானப்படை முடிவு-விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

  • Tamil Defense
  • February 17, 2020
  • Comments Off on 39000 கோடியில் 83 தேஜஸ் வாங்க விமானப்படை முடிவு-விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

39000 கோடியில் 83 தேஜஸ் வாங்க விமானப்படை முடிவு-விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

உள்நாட்டு இராணுவ தளவாடங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 39000 கோடிகள் செலவில் 83 தேஜஸ் வாங்கப்பட உள்ளன.முன்னதாக அதிக தொகைக்கு ஹால் நிறுவனம் விற்பனை செய்ய கேட்டதால் தாமதம் ஏற்பட்டது.அதாவது இந்த 83 விமானங்களை வழங்க ஹால் நிறுவனம் 56500 கோடிகள் கேட்டது.இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது ஒருவருட பேச்சுவார்த்தைக்கு பின் 39000 கோடிகளாக பேசி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது எல்லாம் சரியாக அமைந்துள்ளதால் வரும் மார்ச் 31க்குள் பாதுகாப்பு கேபினட் கமிட்டியின் அனுமதிக்காக இந்த பைல் அனுப்பப்படும்.ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த மூன்று வருடத்திற்குள் மார்க்1ஏ விமானங்களை ஹால் டெலிவரி செய்யத் தொடங்கும்.

கடந்த 2016ம் ஆண்டு இராணுவ கொள்முதல் அமைப்பு சுமார் 49797 கோடிகள் செலவில் 83 தேஜஸ் விமானங்கள் வாங்க அனுமதி அளித்தது.ஆனால் ஹால் அமைப்பு 56500 கோடிகள் கேட்டமையால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் செய்யப்பட்டுள்ளது.தற்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.

சீனா மற்றும் பாக்கிற்கு எதிராக 42 ஸ்குவாட்ரான் பலம் தேவை என்னும் நிலையில் விமான பற்றக்குறை காரணமாக 30 ஸ்குவாட்ரானாக குறைந்துவிட்டது.இதனை சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேஜஸ் தவிர 36 ரபேல் விமானங்களும் வாங்கப்பட்டுள்ளன.ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 விமானங்கள் 40 இணைக்கப்பட்டு வருகின்ற.இந்த மொத்த 123 விமானங்கள் தவிர்த்து எதிர்காலத்தில் தேஜஸ் மார்க் 2 விமானமும் ஆர்டர் செய்யப்படும்.