
இந்தியாவின் பெரிய கடற்பரப்பை கண்காணிக்க இந்தியா தற்போது P8I நெடுந்தூர கண்காணிப்பு விமானங்களை தான் உபயோகித்து வருகிறது.கடற்பரப்பு மட்டுமல்லாமல் பாக்,சீன எல்லைக் கண்கானிப்பிலும் ஈடுபட்டு வரும் பி-8ஐ அவ்வப்போது ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விமானத் தேவை அதிகமாக உணரப்பட்டதால் கடந்த 2016ல் மேலதிக நான்கு விமானங்கள் சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் செலவில் ஆர்டர் செய்யப்பட்டன.இது தவிர கடற்படை மேலும் அதிக ஆறு விமானங்கள் வாங்க உள்ளது.இதற்கு இந்திய தளவாட கொள்முதல் அமைப்பு கடந்த நவம்பரில் அனுமதி அளித்துள்ளது.
இந்த புதிய பொசைடான் விமானங்கள் வரும் ஏப்ரல் முதல் படையில் இணைக்கப்பட உள்ளது.அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவின் இராணுவ கொள்முதல் தற்போது வரை 17 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் இராஜாளி தளத்தில் இருந்து தான் பொசைடான் விமானங்கள் பறந்துள்ளன.இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த விமானங்களின் பணி என்பது அளவிடமுடியாதது.
கடலோர ரோந்து,தேடுதல் மற்றும் மீட்பு, கொள்ளையர்கள் எதிர்ப்பு ,நீர்மூழ்கி எதிர்ப்பு என பல ஆபரேசன்களுக்கும் இந்த பொசைடான் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
டோகலாம் மற்றும் புல்வாமா பிரச்சனையின் போதள இராணுவத்திற்காக எல்லையில் பறந்த இந்த விமானங்கள்.
எதிரிகளின் நீர்மூழ்கியை கண்காணிக்க இந்த விமானங்களை கடற்படை பயன்படுத்துகிறது.பல நாடுகளுடனான பயிற்சியிலும் கலந்து கொண்டுள்ளது.10 மணிநேரம் தொடர்ந்து பறக்க கூடியது.4000கிமீ பறக்க வல்லது.