ரபேல் விமான பாகங்கள் இந்தியாவில் தயாரிப்பு; மேலதிக ரபேல் ஆர்டர் செய்யப்பட உள்ளதா ?
1 min read

ரபேல் விமான பாகங்கள் இந்தியாவில் தயாரிப்பு; மேலதிக ரபேல் ஆர்டர் செய்யப்பட உள்ளதா ?

இந்தியா ரபேல் விமானங்களுக்கான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க தொடங்கியுள்ளது.இவற்றில் சில இந்தியா தற்போது ஆர்டர் செய்துள்ள விமானங்களில் கூட பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரபேல் என்ஜினை மறைக்கும் முதல் தொகுதி கதவு போன்ற அமைப்புகள் இந்தியாவின் நாக்பூர் பிளான்டில் தயாராகி வெளிவந்துள்ளது.இந்த பிளான்டை அம்பானியின் ரிலயன்ஸ் டிபன்ஸ் மற்றும் பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேசன் இணைந்து இந்த நாக்பூர் பிளான்டை நடத்தி வருகிறது.

“டஸ்ஸால்ட் ஏவியேசன் இந்தியாவை முக்கிய இயக்குநராக பார்க்கிறது.பால்கன் பிசினஸ் ஜெட்டாக இருந்தாலும் சரி அல்லது ரபேலாக இருந்தாலும் சரி , இனி டஸ்ஸால்ட் நிறுவனத்தின் எல்லா தயாரிப்புகளும் இந்திய தொடர்பை பெற்றிருக்கும்” என பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இனி வரும் காலங்களில் மேலதிக ரபேல் பாகங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பாகங்கள் இந்தியா ஆர்டர் செய்துள்ள ரபேல் விமானங்களில் இணைக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பிரான்சின் பாகங்களுக்கான இருப்பு மற்றும் தேவை பொறுத்து இது அமையும் என கூறியுள்ளார்.

இன்னிலையில் முதல் நான்கு இந்திய ரபேல் விமானங்கள் மே மாதம் இந்தியா வரஉள்ளது.
முதல் ஸ்குவாட்ரான் அம்பாலா தளத்திலும் இரண்டாவது ஸ்குவாட்ரான் ஹசிமாரா தளத்திலும் நிறுத்தப்பட உள்ளது.