சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க களமிறங்கிய விமானப்படை-மருத்துவ உதவிகளுடன் சீனா சென்றது

  • Tamil Defense
  • February 27, 2020
  • Comments Off on சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க களமிறங்கிய விமானப்படை-மருத்துவ உதவிகளுடன் சீனா சென்றது

இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம் தான் சி-17 குளோப்மாஸ்டர் 3 விமான்.தற்போது சீனாவின் உகான் பகுதியில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க சீனா சென்றுள்ளது.

பாலம் விமான தளத்தில் இருந்து விமானப்படை விமானிகள்,மருத்துவ குழுக்கள் மற்றும் துணை உதவி குழுக்கள் ஆகியவை 26ம் தேதி சீனா சென்றுள்ளனர்.இந்தியர்களை மீட்டு இந்தியா திரும்ப உள்ளனர்.

இது தவிர நல்லெண்ண அடிப்படையில் சீனாவிற்கு 1.5டன்கள் அளவிலான மருத்துவ உபகரணங்களும் இந்தியா அளிக்கிறது.இந்த மெடிக்கல் சப்ளைகளுடன் சி-17 விமானம் தற்போது சீனாவின் உகான் சென்றுள்ளது.

விமானம் திரும்புகையில் கிட்டத்தட்ட 120 பொதுமக்கள் மற்றும் ஐந்து குழந்தைகளை மீட்டு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் மற்றும் இந்திய நட்பு நாடுகளை சார்ந்தோர் இருப்பர்.

விமானம் பிப் 27 அன்று இந்தியா திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே ஏர் இந்தியா இரு முறை பறந்து இந்தியர்களை உகான் பகுதியில் இருந்து மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.