ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை சுமார் 1.86 பில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்காவிடம் இருந்து பெற உள்ளது இந்தியா.இந்த புதிய ஏவுகணைகளை இந்திய தலைநகர் டெல்லியில் நிலைநிறுத்த உள்ளது இந்தியா.
NASAMS-II எனப்படும் நேசனல் அட்வான்ஸ் தரை-வான் பாதுகாப்பு அமைப்பு-IIஐ பெற இந்திய அமெரிக்காவை நாடியுள்ளதாக கடந்த 2018 லிலேயே தகவல்கள் வெளியாகின.இந்த அமைப்புடன் இரஷ்ய மற்றும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இணைத்து தலைநகரில் பல அடுக்கு வான் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
எதிரிகளின் ஆளில்லா விமானம்,பலிஸ்டிக் ஏவுகணை முதல் அனைத்து விதமான வான் அச்சுறுத்தல்களில் இருந்தும் நமது தலைநகரை பாதுகாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவின் நீண்டகால கனவுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.
டெல்லியில் இவற்றை நிலை நிறுத்த ஏற்கனவே சில ரவுண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ தளவாட விற்பனை திட்டம் வழியாக இந்தியா இந்த அமைப்பை பெறுகிறது.
NASAMS-II க்கான ஒப்பந்தம் முடிந்த அடுத்த இரு முதல் நான்கு ஆண்டுகளுக்குள் இந்த அமைப்பு இந்தியாவிற்கு வழங்கப்படும்.இந்த அமைப்பு தவிர தன்னுடைய Terminal High Altitude Area Defense (THAAD) மற்றும் பேட்ரியாட் ஏவுகணையும் (PAC-3) விற்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.ஆனால் ஏற்கனவே இரஷ்யாவுடன் $5.43 பில்லியன் டாலர்கள் செலவில் ஐந்து ஸ்குவாட்ரான் S-400 Triumf surface-to-air missile systems வாங்க ஒப்பந்தமிட்டுவிட்டது.
டெல்லியின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடிமட்ட பாதுகாப்புக்காக இந்த NASAMS ஈடுபடுத்தப்படும்.இது பல ஆயுதங்கள் கலந்த கலவை ஆகும்.அதாவது ஸ்டிங்கர் வான் பாதுகாப்பு ஏவுகணை,துப்பாக்கி அமைப்பு மற்றும் AIM-120C-7 AMRAAM ஏவுகணைகள் ,இவற்றுக்கு ஆதரவாக முப்பரிமாண சென்டினல் ரேடார்கள், fire-distribution centers மற்றும் கட்டளை மற்றும் கட்டுபடுத்தி அமைப்பு ஆகியவை ஈடுபடுத்தப்படும்.இவற்றின் மூலம் மிக நெருங்கி வரும் ஆபத்துக்கள் நீக்க முடியும்.
வெளிஅடுக்கு பாதுகாப்புக்காக நமது டிஆர்டிஓ மேம்படுத்திய இரு அடுக்கு பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பு ஈடுபடுத்தப்படும்.இவற்றில் உள்ள AAD மற்றும் PAD ஏவுகணைகள் தொலைதூர இலக்குகளை அழிக்கும்.
அதற்கு அடுத்த இரண்டாவது பாதுகாப்பு வளையமாக S-400 ஏவுகணை அமைப்பு செயல்படும்.இவை 120, 200, 250 மற்றும் 380கிமீ நெடுந்துரத்தில் வரும் இலக்குகளை அழிக்கும்.
இது தவிர இந்தியா-இஸ்ரேல் மேம்படுத்திய பாரக்-8 நடுத்துர வான் பாதுகாப் அமைப்பு 70-100கிமீ பாதுகாப்பை அளிக்கும்.நமது ஆகாஸ் 25கிமீ தூரம் இலக்குகளை NASAM அமைப்புக்கு வெளியே அழிக்கும்.
பல அடுக்கு பாதுகாப்பு என்றுமே சிறப்பு தான்.ஏனெனில் இலக்கு ஒன்றில் தப்பினாலும் ஒன்றில் மாட்டியே தீரும்.