காமோவ் வானூர்தி ஒப்பந்தம் தாமதம்; இக்லா வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

  • Tamil Defense
  • February 12, 2020
  • Comments Off on காமோவ் வானூர்தி ஒப்பந்தம் தாமதம்; இக்லா வான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

இக்லா எஸ் என்பது ஒரு மிக குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆகும்.இராணுவத்திற்கு அவசர தேவையாக 800 லாஞ்சர்களும் 5000 ஏவுகணைகளும் தேவையாக இருந்தது.

இதற்கான ஒப்பந்தம் நடைபெற்று பல அமைப்புகள் போட்டியிட்டு கடைசியாக இரஷ்ய அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சோதனைகளில் முறைகேடுகள் இருப்பதாக இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட மற்ற நிறுவனங்களான ஸ்வீடனின் சாப் மற்றும் ஐரோப்பாவின் MBDA தங்களது புகார்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் மிக குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்கும் திட்டத்தில் தங்களது இக்லா-எஸ் அமைப்பை குறைந்த விலைக்கு தர இரஷ்யா ஆர்வம் தெரிவித்திருந்த படியால் அந்த அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.

5175 ஏவுகணைகளும் அதற்கு தேவையான துணை அமைப்புகளும் பெறப்பட உள்ளது.இவற்றில் 2,315 ஏவுகணைகள் முழுமையான நேரடியாக பயன்படுத்தும் நிலையிலும் , 1,260 ஏவுகணைகள் semi-knocked down நிலையிலும் , 1,000 ஏவுகணைகள் completely knocked-down நிலையிலும் மற்றும் 600 ஏவுகணைகள் நமது பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்க அனைத்து ஏவுகணைகளும் பெறப்படும் என்பது ஒப்பந்தம்.

இவற்றுடன் ஏவுகணைக்கான லாஞ்சர்கள்,தெர்மல் பார்க்கும் கருவிகள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி அமைப்புகள் பெறப்படும்.

மனிதனால் பிடித்து ஏவக்கூடிய இந்த அமைப்புகளை இராணுவம் பெற்ற பிறகு அவை அதிஉயர பகுதிகள்,பாலைவன பகுதி மற்றும் கடற்கரை பகுதி படைபிரிவுகளுக்கு அனுப்பப்படும்.

ஏனோ இந்த இக்லா-எஸ் அமைப்பை தேர்ந்தெடுத்ததில் பல இராணுவ வல்லுநர்களுக்கும் திருப்தி இல்லை.