பாக்கை மையமாக வைத்து புதிய டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா!! இராணுவம் சிறப்பு வேண்டுகோள்

  • Tamil Defense
  • February 7, 2020
  • Comments Off on பாக்கை மையமாக வைத்து புதிய டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா!! இராணுவம் சிறப்பு வேண்டுகோள்

இந்தியா தற்போது புதிய டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.200கிமீ துரம் செல்லும் வகையில் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தீர்க்கமாக அழிக்கும் இந்த புதிய ஏவுகணையை நமது டிஆர்டிஓ அறிவியலாளர்கள் மேம்படுத்திவருகின்றனர்.பிரனாஷ் என்று இந்த ஏவுகணைக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆயுதத்தின் வேர் பிரகார் ஏவுகணை தான்.பிரகார் 150கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.நமது டிஆர்டிஓ மேம்படுத்திய இந்த ஏவுகணையை விட சிறந்த மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை இராணுவம் வேண்டியது.எனவே தான் இந்த புதிய 200கிமீ தூரம் செல்லும் பிரனாஷ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பிரானாஷ் ஏவுகணை தொடர்பான பணிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் மேம்பாடு தொடர்பான சோதனைகள் 2021 இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரு ஆண்டுகளுக்குள் இராணுவத்தின் சோதனைக்கு இந்த ஏவுகணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு அல்லாத மற்ற வெடிபொருள்களை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை ஒற்றை நிலை திட புரோபலன்ட் என்ஜின் பெற்றிருக்கும்.

அணுஆயுத தாக்குதல்களுக்காக டிஆர்டிஓ மற்ற குறைதூர பிரித்வி ரக ஏவுகணைகளை மேம்படுத்தி வைத்துள்ளது. 150-300 கிமீ தூரம் வரை இந்த பிரித்வி ரக ஏவுகணைகள் அணு வெடிபொருளை சுமந்து சென்று தாக்கும்.இதில் திரவ புரோபலன்ட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
திட புரோபலன்ட் என்ஜின் திரவ என்ஜினை விட சிறப்பானது.திட என்ஜின் எப்போதும் ஏவ தயாராக இருக்கும் நிலையில் திரவ என்ஜின் சிறிது நேரத்திற்கு பிறகே ஏவ முடியும்.

தவிர அதிக தூர அணு தாக்குதலுக்கு அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.700கிமீ முதல் 5500கிமீ வரை தாக்க வல்ல ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன.

பிரனாஷ் ஒரு முறை இந்திய படைகளில் இணைக்கப்பட்டால் இதை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ரக ஏவுகணைகளிலேயே இது விலை குறைவானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.300கிமீ தூரத்திற்கும் அதிகமாக செல்லக்கூடிய ஏவுகணைகள் ஏற்றுமதிக்கு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபடுத்தி அமைப்பு தடை விதிக்கிறது.ஆனால் இந்த பிரனாஷ் 300கிமீக்கு உட்பட்டது என்பதால் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில் 35000 கோடி ஏற்றுமதியே அரசின் இலக்கு என பிரதமர் கூறியிருந்தார்.இதுபோன்ற ஏவுகணைகள் ஏற்றுமதி அதை உறுதிப்படுத்தும்.