டோகாலாம் பிரச்சனையின் போது பொசைடான் விமானங்களை களத்தில் இறக்கிய இந்தியா-வெளியான அதிர்ச்சி தகவல்கள்
1 min read

டோகாலாம் பிரச்சனையின் போது பொசைடான் விமானங்களை களத்தில் இறக்கிய இந்தியா-வெளியான அதிர்ச்சி தகவல்கள்

டோகலாம் பிரச்சனையின் போது சீனத் துருப்புகளின் நடமாட்டத்தை மலைப்பகுதிகளில் கவனிக்க இந்திய கடற்படையின் பி-8ஐ பொசைடான் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களை இந்தியா களமிறக்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இந்த விமானத்தை இந்தியா களமிறக்கியிருந்தது.

தேசிய பாதுகாப்பு எனும் போது முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது அவசியம் குறித்து பேசிய போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு தளபதி ராவத் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜீன் 16,2017ல் டோகலாம் என்னுமிடத்தில் இந்திய மற்றும் சீனத் துருப்புகள் மோதி நின்றன.இரு நாடுகளுமே போரில் மோதிக்கொள்ளும் என கருதப்பட்டன.அதன் பிறகு பத்து சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆகஸ்டு 28,2017 அன்று மோதல் முடிவுக்கு வந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகும் பாக் படைகளின் நடமாட்டத்தை கவனிக்க பி-8ஐ பொசைடான் விமானம் களமிறக்கப்பட்டுள்ளது.

கடலோ,மலையோ பி-8ஐ ஒரு சிறந்த கண்காணிப்பு விமானம்.அதில் live-streaming data இருப்பதால் உடனுக்குடன் இந்தியாவில் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடிந்தது என முன்னாள் இராணுவ வீரர் கேப்டன் டிகே சர்மா கூறியுள்ளார்.இது போன்ற கடின நிலைகளில் கடற்படை மற்றும் இராணுவம் இணைந்து புரிந்து பணியாற்றுவது அவசியம் என கூறியுள்ளார்.

பி-8ஐ போயிங் நிறுவனத் தயாரிப்பு ஆகும்.அமெரிக்கா தனது படைகளில் அதிக விமானங்களை இணைத்திருந்த வேளையில் முதல் முறையாக இந்தியா இந்த விமானங்களை பெற்றது.

தற்போது எட்டு விமானங்கள் படையில் உள்ள நிலையில் மேலும் 4 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.