பிரிட்டனுடன் இணைந்து அடுத்த விமானம் தாங்கி கப்பல் கட்டுமானமா !! உண்மை என்ன ?

  • Tamil Defense
  • February 8, 2020
  • Comments Off on பிரிட்டனுடன் இணைந்து அடுத்த விமானம் தாங்கி கப்பல் கட்டுமானமா !! உண்மை என்ன ?

பிரிட்டனின் பாதுகாப்பு தளவாட அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி அவர்கள் இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி கப்பல் வடிவம் மற்றும் கட்டுமானத்தில் உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.இந்தியாவிற்கு இங்கிலாந்து வடிவம் தொடர்பான ஒத்துழைப்பு வழங்க உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என உறுதிப்படுத்தி தனது பதிலை கூறியுள்ளார்.கடந்த நவம்பர் 28ல் இது குறித்து இரு நாடுகளும் பேசியுள்ளாதகவும் கூறியுள்ளார்.

ராயல் கடற்படை உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரிக் புரோபல்சன் கொண்டுள்ளதாகவும், அதை இயக்குவதில் சிறந்த அனுபவம் கொண்டிருப்பதாகவும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.இரு நாடுகள் இணைந்து மேம்பாடு மற்றும் இணைந்து புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

ஐஎன்எஸ் விசால் 65,000 டன்கள் எடையுடையதாகவும் ,எலக்ட்ரிக் புரோபல்சன் அமைப்பு கொண்டிருக்க வேண்டும் என இந்திய கடற்படை வேண்டியுள்ள நிலையில் இவை அனைத்தும் தற்போது இங்கிலாந்து கட்டியுள்ள எச்எம்எஸ் குயின் எலிசபெத் மற்றும் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கப்பல்களின் திறன்களோடு ஒப்பிடுவதாய் உள்ளது.

முன்னதாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாய் இருத்தது.அதாவது இமால்ஸ் தொழில்நுட்பத்துடன் அணுசக்தி ஆற்றல் கொண்ட கப்பல் தயாரிப்பதாக இருந்தது.ஆனால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக பிரிட்டிஷ் கப்பல் போன்று தற்போது கடற்படை எதிர்பார்க்கிறது.

ஆனால் பிரிட்டிஷ் கப்பல்கள்
“short take off but vertical landing” தொழில்நுட்பத்தில் செயல்படும்.நமது விசால் “catapult assisted takeoff but arrested landing” தொழில்நுட்பத்தில் செயல்படும்.இரண்டுமே தளத்தில் விமான இறங்கும் வெவ்வேறு முறை ஆகும்.

இது தவிர இங்கிலாந்தின் 6ம் தலைமுறை விமான திட்டமான டெம்பெஸ்ட் திட்டத்திலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இங்கிலாந்து விரும்புகிறது.

இந்தியா இதில் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.